கடலூர் மாவட்டம் கடலூர் முதுநகர் காவல் நிலையத்திற்குட்பட்ட காரைக்காடு கிராமத்தை சேர்ந்த அமுதா ( 53)என்பவர் தனது மகன் மற்றும் மருமகள் தன்னை வீட்டிற்குள் விடாமல் தன்னிடம் பிரச்சனை செய்வதாக Ladies First காவல் உதவி எண்ணுக்கு புகார் அளித்தார்.
புகாரின் பேரில் கடலூர் முதுநகர் காவல் நிலையத்திற்கு உடனடியாக தகவல் தெரிவிக்கப்பட்டதையடுத்து முதுநகர் காவல் ஆய்வாளர் உதயகுமார் உதவி ஆய்வாளர் மணிகண்டன் மற்றும் காவலர்கள் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று எதிர்மனுதாரரிடம் விசாரணை மேற்கொண்டு எதிர்மனுதாரர்க்கு தகுந்த அறிவுரை வழங்கப்பட்டது. எதிர்மனுதாரர் இனிமேல் தனது அம்மாவிடம் எந்த பிரச்சினையும் செய்யமாட்டேன் எனவும்,
தனது அம்மாவை நல்லபடியாக பார்த்து கொள்கிறோம் என்றும் கூறி இருவரும் சமாதானமாக சென்றனர் இதன் அடிப்படையில் பிரச்சனைக்கு தீர்வு காணப்பட்டது

No comments:
Post a Comment