நீர்வளத்துறையின் மூலம் காவிரி டெல்டா சிறப்பு தூர் வாரும் பணிகளை மாவட்ட ஆட்சியர் ஆய்வு!!!! - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Tuesday, 10 May 2022

நீர்வளத்துறையின் மூலம் காவிரி டெல்டா சிறப்பு தூர் வாரும் பணிகளை மாவட்ட ஆட்சியர் ஆய்வு!!!!


நீர்வளத்துறையின் மூலம் காவிரி டெல்டா சிறப்பு தூர் வாரும் பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் கி.பாலசுப்ரமணியம் அவர்கள் பார்வையிட்டு ஆய்வு.


கடலூர் மாவட்டம், புவனகிரி வட்டம், பெரியப்பட்டு வாய்க்கால் 3 கி.மீ நீளத்திற்கு ரூ.9.70 இலட்சம் மதிப்பீட்டிலும், அரியகோஷ்டி வாய்க்கால் 2.60 கி.மீ. நீளத்திற்கு ரூ.8.90 இலட்சம் மதிப்பீட்டிலும், மேல் புவனகிரி மானம்பார்த்தான் வாய்க்கால் 10 கி.மீ. நீளத்திற்கு ரூ.9.70 இலட்சம் மதிப்பீட்டிலும் தூர் வாரி கரைகள் பலப்படுத்தும் பணியினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.


தொடர்ந்து சிதம்பரம் வட்டம் சிதம்பரம் புறவழிச்சாலையில் உள்ள சிவகாமிசுந்தரி ஓடை 2.50 கி.மீ நீளத்திற்கு ரூ.11.00 இலட்சம் மதிப்பீட்டிலும், உசுப்பூர் வாய்க்கால் 3.50 கி.மீ நீளத்திற்கு ரூ.4.00 இலட்சம் மதிப்பீட்டிலும் தூர் வாரி கரைகள் பலப்படுத்தும் பணியினை பார்வையிட்டு ஆய்வு செய்து தெரிவித்ததாவது, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் 2022-23 ஆம் ஆண்டிற்கான காவேரி டெல்டா பகுதியில் தூர் வாரும் பணிகளை மேற்கொள்ள உத்தரவு பிறப்பிக்கப்பட்டு பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. 


இதன் வாயிலாக கடலூர் மாவட்டத்தில் 122 பாசன வாய்க்கால்கள், 31 வடிகால்கள் தூர் வாரப்படுவதன் மூலம் 58,655 ஏக்கர் பாசன நிலங்கள் பயன்பெறும் என்பதால் இப்பணிகளை விரைந்து முடித்து விவசாய பெருமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவர அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.


இந்த ஆய்வின் போது செயற்பொறியாளர் (நீர்வளத்துறை) திரு.காந்தரூபன், உதவி செயற்பொறியாளர்கள் திரு.பாலமுருகன், திரு.அருணகிரி, உதவி உதவி பொறியாளர்கள் திரு.குமார், திரு.இரமேஷ், திரு.முத்துக்குமார் மற்றும் அரசு அலுவலர்கள் உடன் இருந்தனர்.

No comments:

Post a Comment

*/