மீனவர் வாழ்வுரிமை இயக்கம் சார்பில் அக்கட்சியின் நிறுவன தலைவர் பெரு. ஏகாம்பரம் தலைமையில் கடலூர் தலைமை தபால் நிலையம் அருகே மத்திய மாநில அரசுகளை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மீனவர்களின் விசைப்படகு மற்றும் பைபர் படகுகளுக்கு டீசல் மானியம் மற்றும் டீசல் அளவை உயர்த்தி வழங்க வேண்டும், மீன்பிடித் தடை காலங்களில் அரசு வழங்கும் நிவாரண தொகை போதாது எனவும் குடும்ப அட்டைக்கு நாளொன்றுக்கு 500 ரூபாய் வீதம் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தியும், மீனவர்களின் வாக்குகளைப் பெற திமுக அறிவித்த தேர்தல் அறிக்கையின்படி பழங்குடியினர் பட்டியலில் சேர்த்திட தேசிய மீன்பிடி ஒழுங்குமுறை சட்டத்தை தடை செய்திட வலியுறுத்தியும் மீனவர்கள் கண்டன கோஷங்களை எழுப்பினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் கடலூர் மாவட்டத்திலுள்ள மீனவ கிராம தலைவர்கள், பஞ்சாயத்தர்கள், மீன் வியாபாரிகள் என நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
அதனைத் தொடர்ந்து பேசிய மீனவர் வாழ்வுரிமை இயக்க தலைவர் ஏகாம்பரம் கூறுகையில் அரசு எங்களது கோரிக்கைக்கு செவிசாய்க்கவிடில் மீனவ பிரதிநிதிகள் இடம் கலந்து பேசி ஆலோசித்து கிழக்கு கடற்கரை சாலையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாகவும் தெரிவித்தனர்.


No comments:
Post a Comment