கடலூர் அருகே குறிஞ்சிப்பாடி தொகுதிக்குட்பட்ட கோதண்ட ராமாபுரத்தில் கடலூர் கூடுதல் ஆட்சியர் அவர்களின் மனு நீதி நாள் முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் கடலூர் வருவாய் கோட்டாட்சியர் சா அதியமான் கவியரசு வரவேற்புரையாற்றினார்.
இந்த மனு நீதி நாள் முகாமிற்கு கடலூர் கூடுதல் ஆட்சியர் ரஞ்சித் சிங் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி விழா பேருரை ஆற்றினார். குறிஞ்சிப்பாடி மாவட்ட கல்வி குழு தலைவர் பொறியாளர் சிவக்குமார் முன்னிலை வகித்தார். கோதண்டராமபுரம் ஊராட்சி மன்ற தலைவர் ஜெயா திட்ட விளக்க உரையாற்றினார். கடலூர் வருவாய் வட்டாட்சியர் இரா .பூ பாலச்சந்திரன் தலைமை தாங்கினார். கடலூர் துணை வட்டாட்சியர் எஸ். அசோகன் நன்றி உரையாற்றினார்.
இந்த நிகழ்ச்சியில் இலவச வீட்டு மனை பட்டா பட்டா மாற்றம் முதியோர் உதவித்தொகை மற்ற இதர உதவித்தொகை திருமண உதவி தொகை முதலமைச்சரின் உழவர் பாதுகாப்புத் திட்ட இறப்பு நிவாரணம் குடும்ப அட்டை ஊட்டச்சத்து தொகுப்பு கண்கண்ணாடி தையல் இயந்திரம் சலவைப் பெட்டி தையல் இயந்திரம் வேளாண் உபகரணங்கள் விதைகள் கன்றுகள் மற்றும் உபகரணங்கள் தீ விபத்து நிவாரணம் ஆகிய நலத்திட்ட உதவிகள் 231 பயனாளிகளுக்கு ரூபாய் 5,497,182.00 வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் திருவந்திபுரம் வருவாய் ஆய்வாளர் தேன்மொழி,கிராம நிர்வாக அலுவலர்கள் கோதண்டராமபுரம் கிராம நிர்வாக அலுவலர் அன்பரசன் சேட பாளையம் கிராம நிர்வாக அலுவலர் இளையராஜா மற்றும் கிராம உதவியாளர்கள் பல்வேறு துறை சார்ந்த அலுவலர்கள் பொதுமக்கள் பெரும் திரளாக கலந்து கொண்டனர்.

No comments:
Post a Comment