வேப்பூர் கிராமத்தில் முத்து மாரியம்மன் கோயில் தேர் திருவிழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் அலகு குத்தி அம்மனுக்கு நேர்த்தி கடனை செலுத்தினர்.
கடலூர் மாவட்டம், வேப்பூர் ஊராட்சியில் முத்து மாரியம்மன் கோயில் உள்ளது. இக்கோவிலில் வருடந்தோறும் சித்திரை மாதத்தில் திருவிழா நடைபெறுவது வழக்கமாகும், கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா நோய் தொற்றால் திருவிழா நடைபெறவில்லை இந்தாண்டிற்கான திருவிழா கடந்த 4- ந் தேதி காப்புகட்டும் நிகழ்ச்சியுடன் தொடங்கியது.
இன்று மே மாதம் 13ந் தேதி காலை 9 மணிக்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் அலகு குத்தி முத்துமாரி அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர் அதன்பிறகு மாலை இத்தேரோட்டம் தொடங்கியது நல்லூர் ஒன்றிய கவுன்சிலர் முத்துக்கண்ணு தொடங்கி வைத்தார் தேரோட்டத்தை தொடங்கி நடைபெற்றது இதில் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர் பக்தர்கள் ஊர்வலம் நடைபெற்றது.
முன்னதாக முத்து மாரியம்மன் கோவில் சக்தி அழைக்கபட்டு அங்கிருந்து பக்தர்கள் கிராமத்தை சுற்றி ஊர்வலமாக அம்மன் சன்னதியை அடைந்தனர், தொடர்ந்து பக்தர்கள் கொண்டு வந்த பாலில் முத்து மாரி அம்மனுக்கு சிறப்பு அபிசேகம் செய்யபட்டது


No comments:
Post a Comment