கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் S.சக்திகணேசன் நேற்று (13.05.2022) தேதி கடலூர் மாவட்டத்தில் கஞ்சா பதுக்கல் மற்றும் விற்பனை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள் பழைய குற்றவாளிகளை கண்காணித்து கஞ்சா விற்பணை செய்தால் அவர்கள் மீது உடனடியாக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து நடவடிக்கை மேற்கொள்ள அதிரடியாக உத்தரவிட்டார்.
அதன்பேரில் அந்தந்த உட்கோட்ட காவல் அதிகாரிகள் மேற்பாற்வையில் காவல் ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள் தலைமையில் 37 தனிபடைகள் அமைக்கப்பட்டு கடலூர் மாவட்டத்தில் 117 இடங்களில் கஞ்சா சம்மந்தமான சோதனை நடவடிக்கைகள் அதிரடியாக மேற்கொள்ளப்பட்டது.
கடலூர் உட்கோட்ட காவல் அதிகாரிகள் கம்பியம் பேட்டை, J.J நகர். புதுப்பாளையம் R.Pநகர், K.T.R.நகர், பெண்ணையாறு கரை ஓரம், கோண்டூர் வண்ணாரப் பளையம், தாழங்குடா செல்லங்குப்பம் C.K கல்லூரி பின்புறம், ரயில் நிலையம். ராசாப்பேட்டை, தைக்கால் ஆகிய இடங்களில் சோதனை மேற்கொள்ளப்பட்டது.
சிதம்பரம் உட்கோட்ட காவல் அதிகாரிகள் ஓமக்குளம் சுடுகாடு, எடத்தெரு, பேருந்து நிலையம், பள்ளிப்படை, ரயில்நிலையம், மீன் மார்க்கெட் M.M நாடார் தெரு, தில்லை காளியம்மன் கோவில் தெரு, மந்தக்கரை, வண்டிகேட். பொய்யாபிள்ளைசாவடி. ஜமால்நகர், இளந்திரைமேடு, அம்மாபேட்டை, முத்தையாநகர், வரகூர்பேட்டை, மீதிகுடி, மீனவர் குடியிருப்பு, மேல்புவனகிரி,பெருமாத்தூர், கீரப்பாளையம் ஈஸ்வரன் கோயில் தெரு, மருதுர் மஞ்சக்கொல்லை, சின்னூர், அண்ணன்கோயில் பரங்கிப்பேட்டை அங்காளம்மன் கோவில்தெரு, தீர்த்தாம்பாளையம், அறியகோஷ்டி, ஆண்டாள் முள்ளிபள்ளம், ஆலப்பாக்கம் ரயில்வே கேட், புதுச்சத்திரம் ரயில்வேகேட், வில்லியனூர் ஆகிய பகுதிகளில் சோதனை மேற்கொள்ளப்பட்டது.
பண்ருட்டி உட்கோட்ட காவல் அதிகாரிகள் அம்பேத்கர் நகர், R.S மணி நகர், கண்டரக்கோட்டை, சிறுவத்தூர், பலாபட்டு, உறையூர், கரும்பூர். குணமங்கலம், பில்லாலிதொட்டி, வெள்ளகேட். திருக்கண்டேஸ்வரம்,
நெல்லிகுப்பம், மேல்பட்டாம்பாக்கம். நடுவீரப்பட்டு பேருந்து நிலையம், வெள்ளக்கரை, C.N பாளையம்,பாலூர். காடாம்புலியூர், சமத்துவபுரம், மேலிருப்பு மடப்பள்ளி, காட்டுக்கூடலூர், எலவத்தடி, குறவன்குப்பம் ஆகிய கிராமங்களில் சோதனை மேற்கொள்ளப்பட்டது
விருத்தாச்சலம் உட்கோட்ட காவல் அதிகாரிகள் விருத்தாச்சலம் பாலக்கரை, செல்லியம்மன் கோவில்தெரு, ரயில்வே ஜங்ஷன், விளக்கப்பாடி ஏரி, மாரியம்மன்கோவில் பின்புறம், வண்ணான்குடிகாடு, பில்லூர் சுமைதாங்கி, பள்ளிப்பட்டு, பழையபட்டினம் விராரெட்டிகுப்பம், கீரனூர், அம்பேத்கர்நகர், சோழன் நகர் ஆகிய பகுதிகளில் சோதனை மேற்கொள்ளப்பட்டது.
சேத்தியாத்தோப்பு உட்கோட்ட காவல் அதிகாரிகள் பெரியகுப்பம் கீழ்புளியங்குடி, சந்தைதோப்பு, லால்பேட்டை, கோட்டைமேடு, அய்யன்குடி ஆகிய பகுதிகளிலும் சோதனை மேற்கொள்ளப்பட்டது.
திட்டக்குடி உட்கோட்ட காவல் அதிகாரிகள் திட்டக்குடி பேருந்து நிலையம், T. இளமங்கலம், கோழியூர், திட்டக்குடி பேருந்துநிலையம், ஆவினங்குடி, சிறுமங்கலம். ராமநத்தம் ஆற்றுஓரம், புளிகாரம்பூர்,
வேப்பூர் நகர், நல்லூர், போத்தனூர், சிறுபாக்கம் அடரி, மங்களார் ஆகிய பகுதிகளில் அதிரடியாக போலிசார் சோதனை செய்தனர்.




No comments:
Post a Comment