கடலூர் மாவட்டம், புவனகிரியில் ஆசிரியர்கள் கூட்டுறவு சங்கத்தின் கடன்தொகையாக ரூ15.00.000 மாக உயர்த்தி வழங்கிட வலியுறுத்தி தமிழக அரசுக்கு சங்க அலுவலகத்தில் சிறப்பு பேரவை கூட்டம் நடைபெற்றது.
இச்சிறப்பு பேரவைக் கூட்டத்திற்கு ஆசிரியர்கள் கூட்டுறவு சங்கத் தலைவர் பி.சா.துறை மணிராஜன் அவர்கள் கலந்து கொண்டு தலைமை தாங்கி தொடக்கி வைத்தார். துணைத் தலைவர் ஆனந்த பெலிக்ஸ் முன்னிலை வகித்து ஏற்றப்பட்ட தீர்மானங்களை வாசித்தார்.
ஆசிரியர் கூட்டுறவு சங்க நிர்வாகக்குழு உறுப்பினர்கள் பி. வெற்றிச்செல்வி ந .குமரவேல் அ.ஜெயா ஆகியோர்கள் வரவேற்புரை ஆற்றினார் சிறப்பு பேரவைக் கூட்டத்திற்கு மேல் புவனகிரி வட்டார கல்வி அலுவலர்கள் செல்வி. லக்ஷ்மி ஆகியோர் கலந்து கொண்டனர்
மேலும் இந்நிகழ்ச்சியில் ஆசிரியர்கள் கூட்டுறவு சங்க நிர்வாகக்குழு உறுப்பினர்கள் தி.சாந்தி ஆர்.மணிமொழி வி.அருணகிரி நாதன், சேகர் ஆகியோர்கள் இயற்றப்பட்ட தீர்மானங்களை வரவேற்று நன்றி உரையாற்றினர் இறுதியாக சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்ட வட்டார கல்வி அலுவலர்களுக்கு ஆசிரியர்கள் கூட்டுறவு சங்க தலைவர் துரை மணிராஜன் சால்வை அணிவித்து கவுரவித்தார்

No comments:
Post a Comment