கடலூா் புதிய பேருந்து நிலையம் கேப்பா்மலை, எம்.புதூா் பகுதியில் அமையவுள்ளது - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Monday, 16 May 2022

கடலூா் புதிய பேருந்து நிலையம் கேப்பா்மலை, எம்.புதூா் பகுதியில் அமையவுள்ளது


கடலூர் மாவட்டம், மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி மற்றும் தமிழ்நாடு குடிநீர் வழங்கல் துறையின் அரசு திட்ட வளர்ச்சி பணிகள் குறித்து மாண்புமிகு வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் , கூடுதல் தலைமை செயலாளர் சிவ் தாஸ்மீனா மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் கி.பாலசுப்ரமணியம்,  நடைபெறும் பணிகளை ஆய்வு மேற்கொண்டனர்.

கடலூர் அரசு தலைமை மருத்துவமனையின் அருகில் மழைநீர் வடிகால் வாய்க்கால் கால்வாய் கட்டுமான பணிகளை பார்வையிட்டு, குண்டுசாலை பகுதியில் முடிக்கப்பட்டள்ள மழைநீர் வடிகால், வாய்க்கால் கட்டுமான தரத்தினை வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

தொடர்ந்து கேப்பர் மலை பகுதி, அரிசிபெரியாங்குப்பம் ஊராட்சி எம்.புதூர் பகுதிகளில் மாநகர பேருந்து நிலையம் அமைப்பதற்கான இடத்தினை வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்  பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர், 


இதில் பெரும்பாலான பொதுமக்கள் எம்.புதூர் பகுதியில் பேருந்து நிலையம் அமைய வேண்டும் என மாண்புமிகு வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் அவர்களிடம் தங்கள் கருத்துக்களை தெரிவித்தனர்.

இதன் அடிப்படையில் எம்.புதூர் பகுதியில் மாநகர பேருந்து நிலையம் அமைத்தால் மாநகரப்பகுதி மேலும் விரிவடைவதுடன் நகரில் போக்குவரத்து நெருக்கடி இல்லாமல் பொதுமக்கள் சிரமமின்றி பேருந்து பயணத்தை மேற்கொள்ளலாம் என  வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர்  தெரிவித்தார்.

 மேலும் அவர் அளித்த பேட்டியில்  கடலூர் பகுதியில் சாலையிலிருந்து இரண்டு அடி உயரமாக கழிவுநீர் கால்வாய் சாலைகள் அமைக்கப்பட்டுள்ளது. கடந்த மூன்று நான்கு ஆண்டுகளாக இந்த பணி தொடர்ந்து நடைபெற்று வந்துள்ள நிலையில் நாங்கள் சாலைகளை மேம்படுத்தி கழிவுநீர் தொட்டிகளை கீழே இறக்கி செயல்படுத்த வேண்டும் என்று நடவடிக்கை  எடுத்துள்ளோம் வரும் மழைக் காலத்திற்குள் இரண்டு மாதத்திற்குள் இப்பணிகளை முடிக்க வேண்டும் என்றும் நாங்கள் உத்தரவிட்டு உள்ளேன் என்றார்.

மேலும் சாலையோர கழிவுநீர் அகற்றும் பணியும் முடுக்கி விடப்பட்டுள்ளது என்று கூறினார் கடந்த 10 ஆண்டுகளாக அதிமுக ஆட்சியில் எந்தப் பணியும் முழுமையாக செயல்படுத்த வில்லை இதற்கு உதாரணமாக குப்பைகளை ஆங்காங்கே தெருவோரங்களில் குப்பை கொட்டி வந்துள்ள நிலையில் தற்போது நாங்கள் முழுமையான முறையில் குப்பை கொட்டும் இடத்தையும் தேர்வு செய்து குப்பைகளை அப்பகுதியில் தான் கொட்டக் கூடிய சூழ்நிலையை உருவாக்கி வருகிேறாம்

தற்போது மாநகராட்சியில்  காலி பணியிடங்கள் உள்ளதால் மாநகராட்சியில் வரி வசூல் செய்யவும் ஆட்கள் இல்லாமல் உள்ள நிலையில் தற்போது முழுமையாக காலி பணியிடங்கள் நீரப்பப்படும் என கூறினார்

மேலும் தென் பெண்னையாறு அருகே மாவட்ட ஆட்சியர் அலுவலகம் பக்கத்தில் புதிய பேருந்து நிலையம் அமைய வாய்ப்பில்லை மழை காலங்களில் தென்பெண்ணையாற்றில்  வெள்ளம் கரை புரண்டு ஒடும் போது மாவட்ட ஆட்சியர் அலுவலகம் பாதித்தது போல்..

பஸ் நிலையமும் பாதிக்கும், இதனால் கடலூர்  கேப்பர் மலை பகுதியில்  காசாநோய் மருத்துவமனை அருகே உள்ள 198 ஏக்கர் .. நிலப்பரப்பினை பார்வையிட்டார் மக்களின் ஏகோபித்த கருத்துக்களோடு இப்பகுதியில் பஸ் நிலையம் அமைக்க படும் என்று அமைச்சர்எம் ஆர் கே பன்னீர்செல்வம் கூறினார்.

தொடர்ந்து கூடுதல் தலைமை செயலாளர் சிவ்.தாஸ் மீனா நகராட்சிநிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை குறித்த ஆய்வினை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மேற்கொண்டார்.

இந்த ஆய்வுக்கூட்டத்தில் குடிநீர் இணைப்பு வழங்குதல் குறித்தும், திடக்கழிவு மேலாண்மை குறித்து மற்றும் நெகிழியை இல்லா தன்மையை உருவாக்குதல் குறித்து துறை சார்ந்த அலுவலர்களிடம் ஆலோசனை மேற்கொண்டு நிறைவடையாத பணிகளை உடனடியாக ஒருமாதகாலத்திற்குள் முடிப்பதற்கான நடவடிக்கையினை மேற்கொள்ளவேண்டும் என தெரிவித்தார்.


இந்நிகழ்ச்சியில் கூடுதல் ஆட்சியர் (வருவாய்) திரு.ரஞ்ஜீத்சிங், கடலூர் மாநகராட்சி மேயர் திருமதி.சுந்தரிராஜா , கடலூர் தி.மு.க.நகரசெயலாளர் கே.எஸ். ராஜா உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் அரசு அலுவலர்கள் உடன் இருந்தனர்.

No comments:

Post a Comment

*/