கடலூர் மாவட்டம் பேருந்து நிலையம் அருகாமையில் புவனகிரி கிழக்கு ஒன்றியம் மற்றும் நகர கழகம் சார்பில் திமுக அரசின் ஓராண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்திற்கு புவனகிரி கிழக்கு ஒன்றிய கழக செயலாளர் டாக்டர் மனோகரன் தலைமை தாங்கினார் புவனகிரி முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் மாநில பொறியாளர் அணி செயலாளருமான துறை கி. சரவணன் முன்னிலை வகித்தார், புவனகிரி நகரக் கழகச் செயலாளரும் பேரூராட்சி மன்றத் தலைவருமான த.கந்தன் வரவேற்புரையாற்றினார்.
கூட்டத்தில் திமுக தலைமை கழக பேச்சாளர் சேலம் சுஜாதா கவிஞர் ஆதித்தியன் திராவிடர் கழக தலைமை கழக பேச்சாளர் யாழ் திலீபன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர், இக்கூட்டத்திற்கு புவனகிரி மேற்கு ஒன்றிய கழக செயலாளர் ஏ. எஸ். மதியழகன், கீரப்பாளையம் கிழக்கு ஒன்றிய செயலாளர் வி.ஜி.பி.சபாநாயகம் சேத்தியாதோப்பு நகர திமுக செயலாளர் பழனிமனோகர், கம்மாபுரம் ஒன்றிய கழக செயலாளர் பி. திருமாவளவன், திருமுட்டம் வடக்கு ஒன்றிய கழக செயலாளர் எஸ். செந்தில்குமார், சேத்தியாதோப்பு பேரூராட்சி மன்றத் தலைவர் தங்க குலோத்தங்கன் நகர துணைச் செயலாளர் சண்முகம் அவைத்தலைவர் நெடுமாறன் நகர பொருளாளர் எழில்வேந்தன்.
புவனகிரி பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள் இராம. செல்லபாண்டியன் அண்ணா ஜோதி வினோதினி ராமச்சந்திரன் லதா சங்கர் சரஸ்வதி புவனகிரி ஆசிரியர் கூட்டுறவு சங்க தலைவர் பி.சா.துறைமணி ராஜன் நகர இளைஞர் அணி பொறுப்பாளர்கள் டி.ஆர். வீரமணி குணசேகர் ஆகியோர் கலந்து கொண்டனர் முடிவில் புவனகிரி கிழக்கு ஒன்றிய துணை செயலாளர் வெற்றிவேல் நன்றி கூறினார்.

No comments:
Post a Comment