சிதம்பரம் கிளை நூலகத்துக்கு சொந்தக் கட்டடம் கட்டித்தர வேண்டுமென சிதம்பரம் தொகுதி எம்எல்ஏ கே.ஏ.பாண்டியன் கோரிக்கை விடுத்தார்.இதுகுறித்து தமிழக சட்டப் பேரவையில் அவர் பேசியதாவது: சிதம்பரம் நகரில் சுமார் 50 ஆண்டுகள் பழைமையான நூலகம் செயல்பட்டு வருகிறது. இந்த நூலகத்தில் 17,000 பேர் உறுப்பினர்களாக பதிவு செய்துள்ளார். நூலகத்துக்கு தினமும் 500-க்கும் மேற்பட்டோர் வருகின்றனர்.
இங்கு சுமார் 1,25,000 புத்தகங்கள் உள்ளன. ஆனால், நூலகம் வாட கைக் கட்டடத்தில் இயங்கி வருகிறது. நூலகக் கட்டடம் அமைக்க ஏதுவாக நகராட்சி சார்பில் 4,000 சதுர அடி இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. அந்த இடத்தில் நூலகத்துக்கு சொந்தக் கட்டடம் கட்டித்தர வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.
இதற்குப் பதிலளித்து அமைச்சர் அன்பில் மகேஷ் பொய் யாமொழி மாவட்ட நூலகர் மூலம் ஆய்வறிக்கை கிடைக்கப் பெற்ற வுடன் சிதம்பரம் கிளை நூலகத்துக்கு உடனடியாக சொந்தக் கட்டடம் கட்டித் தரப்படும் என்றார்

No comments:
Post a Comment