ஆக்கிரமிக்கப்பட்ட 10 ஏக்கர் நிலம் மீட்பு. - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Thursday, 12 May 2022

ஆக்கிரமிக்கப்பட்ட 10 ஏக்கர் நிலம் மீட்பு.

விசலூர் கிராமத்தில் ஆக்கிரமிப்பில் இருந்த 10 ஏக்கர் நிலம் மீட்பு. 


கடலூர் மாவட்டம், விருத்தாசலம் அடுத்த விசலூர் கிராமத்தில் சுமார் 50 ஆண்டுகளுக்கும் மேலாக 60ஏக்கர் பரப்பளவு உள்ள கிஸா ஏரியில் 10ஏக்கர் நிலம் ஆக்கிரமிப்பில் இருந்துவந்தது.


சென்னை உயர் நீதிமன்ற உத்தரவின் பேரில் விசலூர் ஊராட்சியில் ஊராட்சிமன்ற தலைவர் ஜெயச்சந்திரன் தலைமையில் ஆக்கிரமிப்பில் இருந்த 10 ஏக்கர் நிலம்  மீட்கப்பட்டது . 


இந்த ஆக்கிரமிப்பின் போது வட்டார வளர்ச்சி அலுவலர் ஜெயக்குமாரி, வருவாய் ஆய்வாளர் ராஜலட்சுமி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.


இதில் அசம்பாவிதம் ஏதும் ஏற்படாதவாறு மங்களம்பேட்டை ஆய்வாளர் விஜயகுமார் தலைமையிலான காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

No comments:

Post a Comment

*/