தமிழ்நாடு கால்நடை மருத்துவ அலுவலர் சங்க மாநில பொதுக்குழு கூட்டம் மாநில தலைவர் மருத்துவர் கு.குபேந்திரன் தலைமையில் திருச்சி பெமினா ஹோட்டலில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக தமிழக அரசின் கூடுதல் தலைமைச் செயலர் TS ஜவஹர் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினார்.
முன்னதாக பொதுச் செயலர் மருத்துவர் சாமி வெங்கடேசன் பொருளாளர் மருத்துவர் மணிவாசகம் இணைச் செயலர் மருத்துவர் சுரேஷ் தலைமை நிலைய செயலர் மருத்துவர் சுந்தரேசன் சட்டத்துறை செயலர் மருத்துவர்.சக்திவேல் பாண்டி நிர்வாக குழு உறுப்பினர்கள் மருத்துவர் ரவீந்திரன் மருத்துவர் காளீஸ்வரன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர்,
மேலும் புதியதாக தேர்ந்தெடுகப்பட்ட நிர்வாகிகளுக்கு கூடுதல் தலைமைச் செயலர் அவர்கள் பொன்னாடை போற்றி வாழ்த்தினார்.பொதுக்குழுக் கூட்ட ஏற்பாடுகளை அமைப்பு செயலர் மருத்துவர் சுகுமார் சிறப்பாக ஏற்பாடு செய்தார் .தேர்தல் அலுவலராக மருத்துவர் சுரேஷ் கிருஸ்டோபர் செயல்பட்டார் .திருச்சி மண்டல இணை இயக்குநர் மருத்துவர் எஸ்தர் ஷீலா நன்றியுரையாற்றினார்.

No comments:
Post a Comment