தொழிலாளர் தினத்தை முன்னிட்டு குறிஞ்சிப்பாடி அடுத்த வழுதலம்பட்டு ஊராட்சியில் வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம். ஆர்.கே பன்னீர்செல்வம் அவர்கள் தலைமையில் கிராம சபை கூட்டம் - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Sunday, 1 May 2022

தொழிலாளர் தினத்தை முன்னிட்டு குறிஞ்சிப்பாடி அடுத்த வழுதலம்பட்டு ஊராட்சியில் வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம். ஆர்.கே பன்னீர்செல்வம் அவர்கள் தலைமையில் கிராம சபை கூட்டம்

தொழிலாளர் தினத்தை முன்னிட்டு குறிஞ்சிப்பாடி அடுத்த வழுதலம்பட்டு ஊராட்சியில் வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம். ஆர்.கே பன்னீர்செல்வம் அவர்கள் தலைமையில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது


கடலூர் மாவட்டம், குறிஞ்சிப்பாடி அடுத்த வழுதலம்பட்டு ஊராட்சியில் வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட கிராம சபை கூட்டம் நடைபெற்றது மாவட்ட ஆட்சியர் பாலசுப்பிரமணியம் அவர்கள் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் அரசின் திட்டங்கள் குறித்து துறை வாரியாக அலுவலர்கள் பொதுமக்களிடம் எடுத்துரைத்தனர்.


தொடர்ந்து ஊராட்சிகள் துணை இயக்குனர் அவர்கள் வரவேற்புரை வழங்க வழுதலம்பட்டுஊராட்சி மன்ற தலைவர் கலைச்செல்வி அவர்கள் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் கடித மடல் பொதுமக்கள் மத்தியில் வாசித்தார் வழுதலம்பட்டு ஊராட்சி செயலர் கூட்டுப்பொருள் முன்மொழிதல் குறித்த தகவலை கிராமசபை கூட்டத்தில் முன்மொழிந்தார்.இதனைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் பாலசுப்பிரமணியன் அவர்கள் பேசுகையில் 

கிராமசபை கூட்டத்தில் ஊராட்சிக்குட்பட்ட மக்கள் அனைவரும் இந்நிகழ்ச்சியில் பங்கேற்று கூட்டுப் பொருள் குறித்த முன்மொழிந்த தகவலினை அனைவரும் அறிந்திடும் வகையில் பொதுமக்கள் பார்வைக்கு வைக்க வேண்டும் புதிதாக நிறைவேற்றப்படும் தீர்மானங்கள் குறித்து நன்கு தெரிந்து கொண்டு அவற்றில் மக்களின் கருத்துக்களை கேட்டறிந்து தீர்மானம் நிறைவேற்றுவது ஊராட்சி பகுதியில் நெகிழி இல்லாத ஊராட்சியாக பொதுமக்கள் கல் ஒத்துழைப்புடன் அனைத்து கிராம பகுதிகளிலும் மேற்கொள்ளப்பட வேண்டும் அனைவருக்கும் குடிநீர் கிடைக்கப் பெறும் வகையில் குடிநீர் பயன்பாட்டினை மேற்கொள்ள வேண்டும் அனைத்து வீடுகளிலும் கழிவறைகளை பயன் படுத்தும் பணியை முன்னெடுத்து செல்லவேண்டும் அரசின் திட்டங்களை துறை சார்ந்த அலுவலர்கள் அந்தந்த பகுதியில் உள்ள பொதுமக்களிடம் தெரிவித்து திட்டங்கள் செயல்படுத்த துரித நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் என தெரிவித்தார்.


இதனைத் தொடர்ந்து வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் அவர்கள்  பேசுகையில் வழுதலம்பட்டு பகுதியில் உள்ள தலைவர்கள் வார்டு உறுப்பினர்கள் மற்றும் கவுன்சிலர்கள் ஆகியோர்கள் இணைந்து பொதுமக்கள் வியாபாரிகளிடம் நெகிழி பயன்பாட்டை முற்றிலும் தவிர்க்கும் பணியினை மேற்கொள்ள வேண்டும் மேலும் பொதுமக்கள் தேவையினை கண்டறிந்து உள்ளாட்சி வாயிலாகவும் அல்லது அரசின் பல்வேறு திட்டங்கள் வாயிலாகவும் பணியினை மேம்படுத்த வேண்டும்.


இப்பகுதியில் வீட்டுமனை பட்டாக்கள் உடனடியாக வழங்கும் பணியினை துரிதப்படுத்த வேண்டும் எனவும் சாலை இணைப்பு வசதி மேம்படுத்தும் பணியை துரிதப்படுத்தி வருகிறேன் என தெரிவித்து கிராமசபை கூட்டத்தில் கலந்து கொண்ட பொதுமக்களின் கோரிக்கை மனுக்களை பெற்றார்.


இதற்கு முன்னதாக பெருமாள் ஏரி அணை தூர்வாரி கொல்ல அளவினை மேம்படுத்தும் பணியினை வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் அவர்கள் பூமிபூஜை மேற்கொண்டு தொடங்கிவைத்தார் அப்பகுதி விவசாயிகளிடமும் கருத்தை கேட்டறிந்தார். மேலும் தூர்வாரும் பணியை கண்காணிக்க சிறப்பு அலுவலர்களை நியமித்து முழுமையான கண்காணிப்பு பணிகளை மேற்கொண்டு திட்டத்தினை நிறைவேற்றிட வேண்டும் என்றும் இப் பணியை மேற் கொள்வதன் வாயிலாக தற்போது உள்ள நிலையில் இருந்து இரண்டு மடங்கு நீர் இருப்பு உயர வாய்ப்புள்ளதாகவும் இதன்மூலம் பாசனத்திற்கு உட்பட்ட விவசாயிகள் அனைவரும் அதிக பயன் அடைவர் என்று தெரிவித்தார்.


இக்கூட்டத்தில் விருப்பாட்சி ஊராட்சி மன்ற தலைவர் கலைச்செல்வி உதவி இயக்குனர் ஊராட்சிகள் மாவட்ட கல்வி குழு தலைவர் பொறியாளர் சிவக்குமார் மற்றும் பல்வேறு துறை சார்ந்த அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்

No comments:

Post a Comment

*/