தொழிலாளர் தினத்தை முன்னிட்டு மேல் புவனகிரி ஒன்றியம் மருதூர் ஊராட்சியில் சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெற்றது !!!!
கடலூர் மாவட்டம், மேல் புவனகிரி ஊராட்சி ஒன்றியம் மருதூர் ஊராட்சியில் மே தின சிறப்பு கிராம சபை கூட்டம் தமிழக அரசின் வழிகாட்டுதலின்படி ஊராட்சி மன்ற தலைவர் தனலட்சுமி ராமலிங்கம் தலைமையில் நடைபெற்றது சிறப்பு கிராமசபை கூட்டத்தில் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் அன்னக்கிளி இளந்திரையன் முன்னிலை வகித்தார்.
இக்கூட்டத்தில் ஊராட்சிக்கு உட்பட்ட 18 வயதுக்கு மேற்பட்ட அனைத்து வாக்காளர்களும்கிராமசபை கூட்டத்தில் பங்கேற்றனர் சிறப்பு கிராம சபைக் கூட்டத்திற்கு தமிழக அரசின் வழிகாட்டுதலின்படி கிராம சபை பற்றாளர் சத்துணவு அமைப்பாளர் கே. அன்புக்கரசிகலந்துகொண்டு ஊராட்சிகளில் 2021 -2022 ஆம் ஆண்டு நிதி ஆண்டுகளின் வரவு-செலவு கணக்குகளை சரிபார்க்கப்பட்டு ஊராட்சி அலுவலக பலகையில் வெளியிடப்பட்டது.
மேலும் ஊராட்சி செயலாளர் பழனிஇளங்கோவன் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் அனைத்தையும் பொது மக்களுக்குப் புரியும்படி வாசித்தார் இச்சிறப்பு வாய்ந்த சிறப்பு கிராமசபை கூட்டத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் தேன்மொழி பள்ளி ஆசிரியர்கள் மற்றும் அனைத்து நிலை அரசு ஊழியர்கள் நியாய விலை கடை விற்பனையாளர்கள் ராஜேந்திரன் ஞானப்பிரகாசம் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் துப்புரவு பணியாளர் தூய்மை காவலர்கள் மகளிர் சுய குழு உறுப்பினர்கள் அனைவர்களும் மிகுந்த ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.


No comments:
Post a Comment