கடலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் கி.பாலசுப்ரமணியம். தகவல் நேரடி நெல்கொள்முதல் நிலையங்களில் நெல் சேகரிப்பது முதல் கழக கிடங்குகளில் கண்டுமுதல் அரிசியினை ஒப்படைப்பது வரையிலான விநியோக சங்கிலி மேலாண்மை திட்டத்தில் கழக அரவை முகவர்களை (முழு நேரம் / பகுதி நேரம்) மற்றும் கழகத்தில் இணையாத தனியார் அரவை ஆலைகளை ஈடுப்படுத்த தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகம் முடிவு செய்துள்ளது.
எனவே, இந்நிகழ்வில் ஆர்வமுடைய தனியார் அரவை ஆலைகள் தங்களது விருப்ப கடிதத்தினை தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக மண்டல அலுவலகங்களில் சமர்ப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. மேலும், கூடுதல் விவரங்களுக்கு மண்டல மேலாளர், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம், செம்மண்டலம், கடலூர், அலுவலகத்தை தொடர்புகொள்ள மாவட்ட ஆட்சியர் அவர்களால் கேட்டுக்கொள்ளப்படுகிறது. தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்.9442130630 இவ்வாறு கூறப்பட்டு இருந்தது.

No comments:
Post a Comment