கடலூர் மாவட்டம், திட்டக்குடி நகராட்சி கூத்தப்பன் குடிகாடு, ரோட்டுத்தெரு, மணல்மேடு ஆகிய பகுதிகளை உள்ளடக்கிய 14வார்டு மற்றும் 3வது வார்டில் இருந்து வந்தது.
30ஆண்டுகால தண்ணீர் பிரச்சனைக்கு தீர்வை ஏற்படுத்தும் வகையில் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் சி.வெ.கணேசன் அவர்கள் புதிய நீர்தேக்க தொட்டியை இன்று திறந்து வைத்தார். இதனுடன் ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளி புதிய கட்டிடத்தையும் திறந்து வைத்தார்
இந்நிகழ்ச்சியில் திமுக மங்களூர் ஒன்றிய செயலாளர் பட்டூர் அமிர்தலிங்கம், நகர செயலாளர் விபிபி.பரமகுரு, நகரமன்ற தலைவர் திருமதி.வெண்ணிலா கோதண்டம், நகராட்சி ஆணையர் திரு.ஆண்டவர், நகராட்சி பொறியாளர் பாண்டு மற்றும் திமுக நிர்வாகிகள், நகராட்சி ஊழியர்கள் என பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
செய்தியாளர்; சாகுல் அமீது

No comments:
Post a Comment