கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி அடுத்த கொத்தவாசேரி கிராமத்தில் உள்ள அரசு மதுபானக் கடையை அகற்றக் கோரி கிராம மக்கள் கடலூர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர் அந்த மனுவில் கூறியிருப்பதாவது.
கோத்தவாசேரி கிராமம் முருகன் கோவில் அருகே அமைந்துள்ள அரசு மதுபான கடையால் பொதுமக்கள் கோவிலுக்கு சென்று வழிபட முடியவில்லை மது பிரியர்கள் மதுபான பாட்டில்களை வாங்கி வந்து கோவில் வாசலில் குடித்துவிட்டு அசுத்தம் செய்து விட்டு செல்கின்றனர் போதை தலைக்கு ஏறியதும் கோயிலிலேயே படுத்து உறங்குகின்றனர்.
இதனால் கோவிலுக்கு வரும் பெண்களுக்கு வழிபாடு செய்வதற்கு மிகுந்த இடையூறாக உள்ளது சேக் போஸ்ட் பேருந்து நிறுத்தம் அருகே இருப்பதால் பள்ளி செல்லும் மாணவ மாணவிகள் மிகுந்த அச்சத்தோடு மதுபானக் கடையை கடந்து பள்ளி சென்று வருகின்றனர்.
பக்கத்து கிராமமான நத்தமேடு குமுடிமூலை ஆயிகுளம் பொதுமக்கள் இந்த செக்போஸ்ட் பேருந்து நிறுத்தம் வந்து தான் குறிஞ்சிப்பாடி மற்றும் புவனகிரி பகுதிகளுக்கு பேருந்தின் மூலம் சென்று வருவது வழக்கம் அப்படிப்பட்ட பேருந்து நிறுத்த சாலைகளின் இருபுறங்களிலும் மது பிரியர்கள் அமர்ந்துகொண்டு மது அருந்தி வருவதால் பகல் மற்றும் இரவு நேரங்களில் பேருந்திலிருந்து இறங்கி தங்களின் ஊர்களுக்கு செல்லும் பெண்கள் மிகுந்த அச்சத்துடன் தினமும் பயணித்து வருகின்றனர்.
குறிஞ்சிப்பாடி புவனகிரி செல்லும் சாலையில் மதுபான கடை இருப்பதால் மாலை நேரங்களில் போக்குவரத்து பாதிக்கப்பட்டு அடிக்கடி விபத்து ஏற்படும் நிலை உள்ளது மேலும் மது பிரியர்கள் குடித்துவிட்டு தெருக்களில் செல்லும் பொழுது தகாத வார்த்தைகளால் பேசி செல்வதும் வாடிக்கையாக உள்ளது.
இதனால் சாதி ரீதியான மோதல்கள் உருவாக அதிகம் வாய்ப்புள்ளதாகவும் விவசாயத்தை நம்பி வாழ்ந்து வரும் தங்கள் கிராமத்தில் குடிமகன்கள் வயல் வெளிகளில் அமர்ந்து குடித்துவிட்டு வாட்டர் பாக்கெட்டுகளை பாட்டில் களையும் உடைத்து எறிந்து செல்வதானாலும் மிகுந்த வேதனை அடைந்துள்ளதாகவும் மேலும் கொலை கொள்ளை போன்ற அசம்பாவிதம் சம்பவங்கள் பல இந்த மதுபான கடையினால் நடந்துவருவதாக மதுபான கடையை நிரந்தரமாக மூட கோரி மாவட்ட ஆட்சியருக்கு கோரிக்கை வைத்துள்ளனர் கோரிக்கை மனுவை பெற்றுக்கொண்ட மாவட்ட ஆட்சியர் அவர்கள் விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தார்.

No comments:
Post a Comment