வேப்பூர் பஞ்சர் ஒட்டும் கடையில் செல்போன் திருடியவர் கைது!! - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Sunday, 1 May 2022

வேப்பூர் பஞ்சர் ஒட்டும் கடையில் செல்போன் திருடியவர் கைது!!

 

வேப்பூர் பஞ்சர் ஒட்டும் கடையில் செல்போன் திருடியவர் கைது!!


கடலூர் மாவட்டம், வேப்பூர் கூட்டுரோடு ,சேலம் சாலையில்  பஞ்சர் ஒட்டும் கடை வைத்திருப்பவர் சித்திரைவேல் மகன் ராஜசேகர் (வயது 26), இவர் ஏப்ரல் 30 ந் தேதி காலையில் தனது  பஞ்சர் ஒட்டும்  கடையில்  கட்டிலில் படுத்து தூங்கிக்கொண்டு இருந்துள்ளார்.


அப்போது அவ்வழியே வந்த வாலிபர் கட்டிலில் இருந்த ராஜசேகர் செல்போனை தூக்கிக்கொண்டு ஓடியுள்ளார் அந்த சத்தத்தில் தூங்கி எழுந்த ராஜசேகர் திருடன் என கத்தவே அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து செல்போனை  திருடி சென்ற வாலிபரை மடக்கி பிடித்து வேப்பூர்  போலிசாரிடம் ஒப்படைத்தனர்.


பின்னர் போலிசார் விசாரணை செய்ததில் விருத்தாசலம் பழமலை நாதர் நகர்  தெருவை சேர்ந்த. பாபு மகன் சூர்யா (வயது 27) என தெரிய வந்தது  அதைத்தொடர்ந்து அவரிடம் இருந்த ராஜசேகர் செல்போனை பறிமுதல் செய்த போலிசார், சூர்யாவை கைது செய்தனர்.

No comments:

Post a Comment

*/