நல்லூர் ஒன்றிய பா.ஜ,க,சார்பில் நீர் மோர் பந்தல் திறக்கும் நிகழ்ச்சி நல்லூரில் நடைபெற்றது.
கடலூர் மாவட்டம், நல்லூர் வடக்கு ஒன்றிய பாரதிய ஜனதா கட்சி அமைப்பாளர் ஆறுமுகம் தலைமையில் மாவட்ட நிர்வாகிகள் மாரியப்பன், நகர், பாலகிருஷ்ணன், நாராயணசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
பாரதிய ஜனதா கட்சி கடலூர் மாவட்ட தலைவர் இளஞ்செழியன் கலந்து கொண்டு நல்லூர் கடைவீதி, அரசு மருத்துவமனை வளாகம் பகுதிகளில் கொடியேற்றி இனிப்பு வழங்கி நீர் மோர் பந்தலை திறந்து வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் துணைத் தலைவர் ஜெயக்குமார், மாநில நெசவாளர் பிரிவு செயலாளர் செல்வம், இளைஞரணி மாவட்ட தலைவர் மருது, பழனிசாமி, சுப்ரமணியன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

No comments:
Post a Comment