கடலூர் மாவட்டம்,சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக் கழகத்தின் கீழ் இயங்கி வந்த ராஜா முத்தையா மருத்துவக்கல்லூரி அரசு மருத்துவ கல்லூரியாக மாற்றம் செய்யப்பட்டு இயங்கிக் வருகிறது.
இந்நிலையில் கல்லூரியில் தற்போது முதலாம் ஆண்டு சேர்ந்த மாணவர்கள் அரசு கல்லூரிகளில் போன்ற ரூ.13 ஆயிரம் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இரண்டாம் ஆண்டு மூன்றாம் ஆண்டு உள்ளிட்ட மாணவர்களுக்கு 4 லட்ச ரூபாய் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.ஒரே கல்லூரியில் இரு வேறான கட்டணம் வசூலிக்கப்படுவதை கண்டித்தும், மற்ற அரசு கல்லூரிகளில் கல்வி கட்டணம் வசூலிப்பது போல், இங்கேயும் கட்டணம் வசூலிக்க வேண்டும் என்று 10வது நாளாக காலவரையற்ற கவனயீர்ப்பு போராட்டம் நடத்திவருகின்றனர்.
இதன் ஒருபகுதியாக மருத்துவ கல்லூரி மாணவர்கள் நீதி வேண்டும் என்று "JUSTICE " வார்த்தைகள் போல் நின்று போராட்டம் செய்தனர்.

No comments:
Post a Comment