குறிஞ்சிப்பாடி பகுதியில் மாணவ- மாணவிகளுக்கு நெய்வேலி சரக டிஎஸ்பி விழிப்புணர்வு!! - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Saturday, 14 May 2022

குறிஞ்சிப்பாடி பகுதியில் மாணவ- மாணவிகளுக்கு நெய்வேலி சரக டிஎஸ்பி விழிப்புணர்வு!!


குறிஞ்சிப்பாடி விழப்பள்ளம் பகுதியில் உள்ள மாணவர்மாணவி களுக்கும் நெய்வேலி சரக டிஎஸ்பி ராஜேந்திரன் அவர்கள் விழிப்புணர்வு.


சட்டமேதை அண்ணல் அம்பேத்கர் அவர்கள் இந்திய சாசனத்தை உருவாக்கியுள்ளார் அதன்படி நாம் அனைவரும் நடக்க வேண்டும்.


கிருஷ்ணகிரி அரசு பள்ளியில் படிக்கும் 11-ம் வகுப்பு மாணவன் விக்னேஷ் மனிதக்கழிவுகளை மனிதனே அள்ளுவதை தவிர்க்க ரோபோவை கண்டுபிடித்த வாட்ஸ் அப்பில் வந்த வீடியோவை காண்பித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு.


மது அருந்துதல் புகைப்பிடித்தல் மாணவர்களுக்குள் சண்டையிடுதல் ஆசிரியரை தாக்குதல் உள்ளிட்ட தீய பழக்கத்திற்கு அடிமையாகமல் இருக்க பெற்றோர்கள் பிள்ளைகளுக்கு அறிவுரை கூற வேண்டும் என டிஎஸ்பி பேச்சு.


மாணவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டால் அவர்களின் எதிர்காலம் எவ்வாறு  பாதிக்கப்படும் என்பதைப்பற்றிய விழிப்புணர்வு பேச்சு.


தவறான பாதையில் செல்லாமல் மாணவர்கள் நன்றாக படித்து ஒரு நல்ல நிலையை அடைந்து பல்வேறு அரசு துறைகளை சார்ந்த வேலைகளுக்கு செல்ல வேண்டும்.

பெற்றோர்களாகிய நீங்கள் மிகவும் கஷ்டப்பட்டு வேர்வை சிந்தி வருமானத்தை ஈட்டி நாம் படிக்கவில்லை என்றாலும் பிள்ளைகளைப் நன்றாக படிக்க வைக்க வேண்டும் என்ற நல்லதொரு எண்ணத்தில் பல லட்சங்களை செலவு செய்து படிக்க வைக்கிறீர்கள்  என்பதை அனைத்து பெற்றோர்களும் தங்கள் பிள்ளைகளுக்கு உணர்த்தி நன்றாகப் படிக்கச் சொல்ல வேண்டும் என்றும் தீய செயல்களில்  ஈடுபடுவதை தவிர்த்து நல்ல செயல்களில் ஈடுபட வேண்டும் என அறிவுரை வழங்க வேண்டும் என்றும் காவல்துறை என்றும் உங்களுக்கு நண்பனாகவும் மாணவர்களின் எந்த ஒரு எதிர்கால நல்லதொரு வளர்ச்சிக்கு என்றும் பக்கபலமாகவும் இருப்போம் என்று  நெய்வேலி சரக டிஎஸ்பி ராஜேந்திரன் அவர்கள் பெற்றோர்களுக்கு எடுத்துத்துரைத்தார். 


இந்நிகழ்ச்சியில் குறிஞ்சிப்பாடி சட்டம்ஒழுங்கு சப்-இன்ஸ்பெக்டர்  பிரசன்னா மற்றும் காவலர்கள் உடனிருந்தனர்.

No comments:

Post a Comment

*/