கடலூரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மனுகொடுக்கும் போராட்டம் - 2000 மேற்பட்ட மனுக்கள் மாவட்ட ஆட்சித் தலைவரிடம் ஒப்படைப்பு!! - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Friday, 6 May 2022

கடலூரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மனுகொடுக்கும் போராட்டம் - 2000 மேற்பட்ட மனுக்கள் மாவட்ட ஆட்சித் தலைவரிடம் ஒப்படைப்பு!!

 

தமிழகத்தில் பல ஆண்டு காலமாக புறம்போக்கு நிலங்களில் குடியிருக்கும் மக்களுக்கு மனைப்பட்டா கேட்டு தண்ணீர் தேங்காத கரம்பாக உள்ள நீர்நிலை புறம்போக்கு களில் வசிக்கின்ற மக்களுக்கு வகை மாற்றம் செய்து பட்டா வழங்க கோரியும் நீதிமன்ற உத்தரவு என்ற பெயரில் அப்புறப்படுத்தப்படும் நடவடிக்கையை மாற்று இடம் கொடுக்க வரை காலி செய்யாமல் இருக்கவேண்டும் 


நகர்புறத்தில் வசிக்கும் மக்களை வாழ்வாதாரத்துக்கு ஏற்ப நகரத்தை ஒட்டிய பகுதியில் இடம் வழங்கிட வேண்டும், கோயில் சர்ச் மசூதி நிலைகளில் குடியிருக்கும் இடத்திற்கான வாடகை உயர்வை திரும்பப் பெற வேண்டும்


வாடகை பாக்கி என்ற பெயரில் இடத்தை விட்டு வெளியேற்ற கூடாது அனைத்து சமய இடங்களில் வசிக்கும் மக்களுக்கு இடத்திற்கான தொகையை நிர்ணயித்து தவணைமுறையில் பெற்று கிரையம் செய்து பட்டா வழங்கிட வேண்டும்

நத்தம் புறம்போக்கு புறம்போக்கு தரிசு நிலம் புறம்போக்கு வசிக்கும் மக்களுக்கு காலதாமதமின்றி பட்டா வழங்க வேண்டும் ஏழை எளிய மக்களுக்கு வழங்கப்படும் வீடு கட்டும் திட்டத்திற்கான தொகையினை 5 லட்சமாக உயர்த்தி வழங்கிட வேண்டும்.

மேற்கண்ட கோரிக்கையை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பாக கடலூர் மஞ்சக்குப்பம் மணி கூண்டில் இருந்து பேரணியாக புறப்பட்டு மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் முன்பாக மனு கொடுக்கும் போராட்டம் நடைபெற்றது.


போராட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்மாவட்ட செயலாளர் கோ மாதவன் தலைமையில் நடைபெற்றது.மாநகர செயலாளர் அமர்நாத் ஒன்றிய செயலாளர் பஞ்சாசரம் முன்னிலையில் நடைபெற்றது


மத்தியகுழு உறுப்பினர் தோழர் உ வாசுகி மாநில குழு உறுப்பினர் தோழர் ரமேஷ்பாபு மாவட்ட செயற்குழு உறுப்பினர் டி ஆறுமுகம் உதயகுமார் மருதவாணன் கருப்பையன் சுப்பராயன் ராமச்சந்திரன் அசோகன் தேன்மொழி ராஜேஷ் கண்ணன் கலந்து கொண்டார்கள் 2000 மேற்பட்ட மனுக்கள் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களிடம் வழங்கப்பட்டது.

No comments:

Post a Comment

*/