மாட்டு வண்டி மீது அடையாளம் தெரியாத லாரி மோதி விபத்து, 3 பேர் காயம் ஒரு மாடு இறந்தது - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Friday, 6 May 2022

மாட்டு வண்டி மீது அடையாளம் தெரியாத லாரி மோதி விபத்து, 3 பேர் காயம் ஒரு மாடு இறந்தது


கண்டபங்குறிச்சியில்   டயர் மாட்டு வண்டி மீது அடையாளம் தெரியாத லாரி மோதி விபத்து, 3 பேர் காயம்  ஒரு மாடு இறந்தது


கடலூர் மாவட்டம், வேப்பூர் அடுத்த கண்டபங்குறிச்சி காலனி அருகே அடையாளம் தெரியாத லாரி டயர் மாட்டு வண்டி மீது மோதியதில் 3 பேர் காயமடைந்தனர் ஒரு மாடு அங்கேயே இறந்தது

வேப்பூர் தாலுக்கா,  தே.புடையூர் கிராமத்தை சேர்ந்த ரத்தினம் மகன் காமராஜ் (வயது 60), ரஞ்சித்குமார் (வயது 22)  அதே கிராமத்தை சேர்ந்த சுப்ரமணியன் மனைவி கொளஞ்சியம்மாள் (வயது 70), ஆகிய மூவரும் டயர் மாட்டு வண்டியில் நெல் அரைப்பதற்காக நல்லூர் ரைஸ் மில்லுக்கு சென்றுவிட்டு, மீண்டும் தே,புடையூர்  நோக்கி  சென்று கொண்டிருந்தனர்.


மே-6 ந் தேதி அதிகாலை 4 மணிக்கு,  சேலம் விருத்தாசலம் சாலையில், கண்டபங்குறிச்சி காலணி அருகே புடையூர் நோக்கி சென்று கொண்டிருந்த போது  அதே திசையில் வேப்பூரிலிருந்து விருத்தாசலம் நோக்கி சென்ற அடையாளம் தெரியாத வாகனம் டயர்வண்டி மீது  மோதி விபத்து ஏற்பட்டது 
இதில் டயர் வண்டியில் பயணம்செய்த காமராஜீக்கு கால் முறிவும், ரஞ்சித்குமார் கொளஞ்சியம்மாள் ஆகிய இருவருக்கும் தலையிலும் காயம் ஏற்பட்டது  டயர் வண்டியை இழுத்து சென்ற மணப்பாறை மாடு ஒன்று சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டது.
 

காயம்பட்ட மூவரும் விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கபட்டனர். இது குறித்து  வேப்பூர்  போலிசார் வழக்கு பதிந்து விசாரணை செய்து வருகின்றனர்.

No comments:

Post a Comment

*/