மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய அசானி புயல், காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுவிழந்து ஆந்திரா - மசூலிப்பட்டணம் அருகே நேற்று முன்தினம் கரையைக் கடந்தது. இந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் காலை 8.30 மணியளவில் மேலும் வலுவிழந்து காற்றழுத்தத் தாழ்வு பகுதியாக அதே இடத்தில் நிலவுகிறது. இது படிப்படியாக வலுவிழக்கக் கூடும்
இந்த காற்றழுத்த தாழ்வு பகுதியால் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பரவலாக லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பூர், கோவை, நீலகிரி, ஈரோடு மற்றும் சேலம் ஆகிய மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

No comments:
Post a Comment