திருவருட்பிரகாச வள்ளலார் அவதரித்த இல்லத்தில் சன்மார்க்க சத்திய தருமச்சாலை 156-ஆவது ஆண்டு தொடக்க விழா - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Wednesday, 25 May 2022

திருவருட்பிரகாச வள்ளலார் அவதரித்த இல்லத்தில் சன்மார்க்க சத்திய தருமச்சாலை 156-ஆவது ஆண்டு தொடக்க விழா

திருவருட்பிரகாச வள்ளலார் அவதரித்த இல்லத்தில் சன்மார்க்க சத்திய தருமச்சாலை 156-ஆவது ஆண்டு தொடக்க விழா கொண்டாடப்பட்டது !!!


கடலூர் மாவட்டம், புவனகிரி வட்டம் மருதூர் கிராமத்தில் திரு அருட்பிரகாச  வள்ளல் பெருமானார் வடலூரில் பிரபவ ஆண்டு வைகாசி மாதம் தமிழ்தேதி11 ஆங்கில தேதி 23 /05 /1867 ஆம் ஆண்டுமுதன் முதலாக சத்திய தருமச்சாலையை தொடக்கிவைத்தார்.அன்று முதல் ஒவ்வொரு ஆண்டும் தருமச்சாலை தொடக்க விழா கொண்டாடப்படுவது வழக்கம்.

அதைத்தொடர்ந்து. 155 வது ஆண்டு நிறைவு பெற்று 156ஆவது ஆண்டு  தொடக்க விழா இன்று சுப கிருது ஆண்டு வைகாசி மாதம் 11ம் தேதி புதன்கிழமை 25/ 05 /2022. ல் வடலூர் சத்திய தருமசாலை மற்றும் வள்ளலார் அவதரித்த திருமருதூர் இல்லத்தில் அதிகாலை 6.00 மணி அளவில்   திருஅருட்பிரகாச வள்ளலாரால் தொடங்கப்பட்ட சத்திய தருமச்சாலை அடுப்பிற்கு கற்பூரதீபம் காண்பித்து கொடியேற்றத்துடன் தொடங்கி  ஜோதிதரிசனம் வழிபாடுசெய்து ஜீவகாருண்ய ஒழுக்கம் சத்விசாரம் தருமச்சாலையின் சிறப்புகள் சொற்பொழிவு அருட்பா இன்னிசை திருஅருட்பா ஆறாம் திருமுறை சத்விசாரம் சன்மார்க்க நெறி சத்விசாரம் நான்கு வகை ஒழுக்கம் சத்விசாரம் அருட்பெருஞ்ஜோதி மகாமந்திரம் பாராயணம் அருட்பா மகா மந்திரம் போன்ற ஆன்மீக சொற்பொழிவுகள் வள்ளலார் அவதரித்த இல்லத்தில் ஆன்மீகத் தொண்டர்கள் மற்றும் மருதூர் கிராம வாசிகள் தன்னார்வத் தொண்டர்களும்  கலந்து கொண்டு ஆன்மீக தொண்டர்களுக்கு அன்னதானம் வழங்கி  சீரும் சிறப்புமாக 156.வது ஆண்டு தொடக்க விழா கொண்டாடப்பட்டது.

No comments:

Post a Comment

*/