கடலூர் மாவட்டம், பெண்ணாடம் அடுத்த உச்சிமேடு கிராமத்தைச் சேர்ந்த அறிவழகன் மனைவி பரமேஸ்வரி(29) இவர்களுக்கு நாலரை வயதில் தர்ஷித் என்ற மகனும் கிஷ்வந்த் என்ற 10 மாத குழந்தையும் உள்ளனர்.
அறிவழகன் வெளிநாட்டிற்கு சென்று ஆறு மாதங்கள் ஆகும் நிலையில் பரமேஸ்வரியின் அம்மா ஊரான தாழநல்லூர் கிராமத்தில் மாரியம்மன் கோவில் திருவிழா நடந்து வருகிறது. இதனால் பரமேஸ்வரி தனது இரண்டு குழந்தைகளுடன் தாழநல்லூர் கிராமத்திற்கு சென்றுள்ளார்.
இந்நிலையில் நேற்று மாலை 4, மணி அளவில் விளையாடிக் கொண்டிருந்த பத்து மாத குழந்தையான கிஷ்வந்த் வீட்டிற்கு பெயிண்ட் அடிக்க திறந்த நிலையில் வைத்திருந்த டின்னரை குடிநீர் என நினைத்து குடித்துக் கொண்டிருப்பதை பார்த்த பரமேஸ்வரி கத்தி கூச்சலிட்டார்
அதனால், அருகிலிருந்த உறவினர்கள் ஓடிவந்து இருசக்கர வாகனத்தில் குழந்தையை தூக்கிக் கொண்டு விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு கிஷ்வந்ததுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கபட்டு மேல் சிகிச்சைகாக 108 ஆம்புலன்ஸ் மூலம் சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கொண்டு சென்று சேர்த்தனர்.
அங்கு சிகிச்சை பலனின்றி மே21 ந் தேதி குழந்தை கிஷ்வந்த் பரிதாபமாக உயிரிழந்தார்.இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

No comments:
Post a Comment