திட்டக்குடி அருகே JSA வேளாண்மை தொழில் நுட்பக் கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவர்கள் வரவேற்பு மற்றும் நிகழ்ச்சி - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Wednesday, 20 April 2022

திட்டக்குடி அருகே JSA வேளாண்மை தொழில் நுட்பக் கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவர்கள் வரவேற்பு மற்றும் நிகழ்ச்சி


கடலூர் மாவட்டம்,திட்டக்குடி அருகே JSA வேளாண்மை தொழில் நுட்பக் கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவர்கள் வரவேற்பு மற்றும் நிகழ்ச்சி நடந்தது.


திட்டக்குடி அருகே ம.பொடையூரில் இயங்கி வரும் JSA வேளாண்மை மற்றும் தொழில்நுட்ப கல்லூரியில் புதிதாக சேர்ந்த முதல் ஆண்டு மாணவர்களை வரவேற்பு நிகழ்ச்சி கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கல்லூரியின் தலைவர் ஜெயராமன், செயலர் அருண், செயலாக்க இயக்குனர் மருத்துவர் கண்மணிஅருண் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். இதில் கல்லூரி முதல்வர் முனைவர் குமார் வரவேற்புரை யாற்றினார். 


தர்மபுரி இந்தியன் வங்கி முதன்மை மேலாளர் கிளை மேலாளர் மனோகர் கலந்து கொண்டு குத்துவிளக்கு ஏற்றி வைத்தார். நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளராக தர்மபுரி இந்தியன் வங்கி துணை பொது மேலாளர் பழனி கலந்து கொண்டு பேசும் போது மாணவர்களை இலக்கை நிர்ணயித்து அந்த இலக்கை அடைய கடினமாக உழைக்க வேண்டும், UPSC, TNPSC, NABARD போன்ற தேர்வுக்கு மாணவர்களை ஆயத்தப்படுத்தி நமது நாட்டின் முதுகெலும்பு விவசாயம் என்பதால் வேளாண்மை படிப்பைத் தேர்வு செய்த மாணவர்களை மனதார பாராட்ட வேண்டும், மாணவர்கள் சுய ஒழுக்கத்துடனும் நேர்மையுடனும் சமூகத்தின் நெறிமுறைகளை மதித்து நடக்க வேண்டும் போட்டி உலகில் எளிதாக சாதிக்க முடியும்,மாணவர்கள் தங்கள் இலக்குகளை அடைவதில் மிகவும் நேர்மையாக இருக்க வேண்டும் என பேசினார். 

தொடர்ந்து வங்கிகளில் வேளாண் கள அலுவலர்களாக தேர்வாகியுள்ள முன்னாள் மாணவர்கள் குகன் மற்றும் ரோவினா ஆகியோரை பாராட்டி பொன்னாடை போர்த்தி கௌரவித்தனர். முடிவில் கல்லூரியின் துணை முதல்வர் மோகன் நன்றி கூறினார். நிகழ்ச்சியில் உதவிப் பேராசிரியர்கள் ரகுநாத், ரம்யா, ஆஷாபிரியங்கா, பேராசிரியர்கள், கல்லூரி ஊழியர்கள், மாணவர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment

*/