சிதம்பரம் போக்குவரத்து காவல்துறையினர் வாகனத்திற்கு வழக்குப்பதிவு - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Wednesday, 20 April 2022

சிதம்பரம் போக்குவரத்து காவல்துறையினர் வாகனத்திற்கு வழக்குப்பதிவு

 

கடலூர் மாவட்டம்,சிதம்பரம் நகரில் மேடை வெளியில் நீண்ட நேரமாக இருசக்கர வாகனம் நின்று இருக்கும் நிலைகள் சிதம்பரம் போக்குவரத்து காவல்துறை ஆய்வாளர் பார்த்திபன் தலைமையில் போக்குவரத்து காவலர்கள் நின்று கொண்டு வாகனத்திற்கு வழக்குப்பதிவு செய்யப்பட்டது. போக்குவரத்துக்கு பாதிப்பு இல்லாமல் செயல்பட வேண்டுமென்று முன்னெச்சரிக்கையாக வழக்குத் தொடரப்பட்டது இனிவரும் காலங்களில் இது போன்ற செயலை செய்ய வேண்டாம் என்று போக்குவரத்து காவல்துறை சார்பில் பொதுமக்களுக்கு அறிவுரை கூறப்பட்டுள்ளது.


இதனை தொடர்ந்து சிதம்பரம் நகரில் மேலரத வீதியில் செயல்பட்டு வரும் ஆறுமுக நாவலர் பள்ளியில் பயின்று வரும் சிறுவர்கள் இருசக்கர வாகனத்தை ஓட்டி வந்த காரணத்தால் அவர்களின் இருசக்கர வாகனமும் மற்றும் அவர்கள் பள்ளிக்கு எடுத்து வர தடை செய்யப்பட்டுள்ள  கைபேசியும் கைப்பற்றி அவரின் தலைமை ஆசிரியர் வசம் ஒப்படைக்கப்பட்டது. மேலும் மேற்படி மாணவர்களை அவர்களின் பள்ளி தலைமையாசிரியர் வசம் எச்சரிக்கை அனுப்பப்பட்டது. 


மேலும் மாணவர்கள் ஓட்டி வந்த இருசக்கர வாகனம் காவல் நிலையத்தில் கைப்பற்றி வைக்கப் பட்டுள்ளது.  மாணவர்களின் பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும் இதே போன்ற செயலில் ஈடுபட்டு வரும் மாணவர்களின் மீது கட்டாயம் தகுந்த பிரிவு கீழ் நடவடிக்கை எடுக்கப்படும்.

செய்தியாளர்; மா. பாலாஜி.


No comments:

Post a Comment

*/