திட்டக்குடி அருகே திருநங்கைகளிடம் போலீசார் சமாதானம் - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Tuesday, 19 April 2022

திட்டக்குடி அருகே திருநங்கைகளிடம் போலீசார் சமாதானம்

கடலூர் மாவட்டம்,திட்டக்குடி வட்டம்  ஆவடி x ரோட்டில் சமயபுரத்திலிருந்து சாமி தரிசனம் செய்துகொண்டு ஆவடி வழியாக சென்று கொண்டிருந்தனர் அப்போது அவசரத் தேவைக்காக லாரி ஓரங்கட்டிய போது பின்னாடி வந்த டாடா சுமோ கார் தன் கட்டுப்பாட்டை இழந்து லாரி முன் மோதாமல் வேகமாக வந்து  ஓரங்கட்டியது.


இதைக்கண்டு லாரியின் மேல்  இருந்தவர்கள் காரை  ஓட்டிவந்த  ஓட்டுனரை சரமாரியாக அடித்தனர் டாட்டா  சுமோவில் 5 பயணிகள்  திருநங்கைகள் இருந்தனர் திருநங்கைகளுக்கும்  லாரியில்  வந்தவர்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு தள்ளுமுள்ளு ஏற்பட்டது சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் இருதரப்பினரையும் சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர்.

ஆனால் திருநங்கைகள் மட்டும் நாங்கள் இங்கிருந்து போக மாட்டோம் எங்கள் ஓட்டுனரை அடித்ததற்கு  பதில் சொல்லவும் என்று போலீசாரிடமும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர் அவ்வழியாக வந்த பேருந்துகளை வழிமறித்து   போராட்டம் பண்ண  ஆரம்பித்தனர்     மீண்டும் போலீசார் திருநங்கைகளை  சமாதானம் செய்து தொழுதூர் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.

செய்தியாளர்; செ. பாலமுருகன்.

No comments:

Post a Comment

*/