காட்டுமன்னார்கோவில் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து ஆர்ப்பாட்டம் !!! - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Monday, 18 April 2022

காட்டுமன்னார்கோவில் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து ஆர்ப்பாட்டம் !!!

புரட்சிகர சோசலிச கட்சி சுவாமி சகஜானந்தா மக்கள் நலப்பேரவை இணைந்து கோரிக்கை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.


கடலூர் மாவட்டம், காட்டுமன்னார் கோயில் கடைவீதியில் சுவாமி சகஜானந்தா சிலை அருகில் புரட்சிகர சோசலிச கட்சி ஆர் எஸ் பி சுவாமி சகஜானந்தா மக்கள் நலப்பேரவை இணைந்து மக்கள் வாழ்வாதார கோரிக்கை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது ஆர்ப்பாட்டத்திற்கு சுவாமி சகஜானந்தா மக்கள் நலப் பேரவை நிறுவனர் நாகராஜன் மற்றும் ஆர்எஸ்பி ஒன்றிய பொறுப்பு பாரி ஆகியோர் தலைமை தாங்கினார்கள் அய்யா எல் இளையபெருமாள் பேரவையின் நிறுவனர் தலைவர் பொட்டு ராமானுஜம் ஆர் எஸ் பி ஒன்றிய குழு செல்வி ஆகியோர் முன்னிலை வகித்தனர். 


சிறப்பு அழைப்பாளராக ஏழைகள் முன்னேற்றக் கழகம் நிறுவனத் தலைவர் எம் ஏ டி அர்ஜுனன் மற்றும் புரட்சிகர சோசலிச கட்சியின் மாநில குழு எம்ஜிஆர் என்கிற ராமச்சந்திரன் மாவட்ட செயலாளர் கலியமூர்த்தி மயிலாடுதுறை மாவட்ட செயலாளர் நாராயணசாமி மாவட்ட குழு ராமதாஸ் மற்றும் புரட்சித் தமிழகம் கட்சியின் மாநில துணை செயலாளர் இளையராஜா மாவட்ட செயலாளர் மணிமாறன் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார்கள் நிகழ்ச்சியில் புரட்சிகர சோசலிச கட்சியின் காட்டுமன்னார்கோயில் ஒன்றியம் குழு சார்பாக அறிவழகன் ராமமூர்த்தி குமராட்சி ஒன்றியம் சார்பாக கிருஷ்ணமூர்த்தி விஜயகுமார் கிழக்கு ஒன்றியத்தின் சார்பாக கந்தசாமி ஆகியோர் கலந்துகொண்டு பங்குபெற்றனர் முடிவில் குமராட்சி ஒன்றிய ஆர்எஸ்பி கட்சி ஒன்றிய துணை செயலாளர் தஷ்ணாமூர்த்தி நன்றி கூறினார்.


நிகழ்ச்சியில் கோரிக்கையாக அரசு அலுவலகங்களில் உள்ள காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் மேலும் நகரம் மற்றும் கிராமப்புறங்களில் வேலை வாய்ப்பினை உருவாக்கி படித்த வேலையில்லா இளைஞர்களுக்கு வேலை வழங்க வேண்டும் தமிழக பள்ளிகளில் பணியாற்றி வரும் 12 ஆயிரம் பகுதி நேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் படித்து வேலை இல்லாத இளைஞர்களுக்கு வேலை கிடைக்கும்வரை வாழ்வாதார உதவிகளை வழங்க வேண்டும் .


காட்டுமன்னார்கோவில் பேரூராட்சிக்குட்பட்ட அனைத்து தெருக்கள் மற்றும் கடை வீதிகளில் ஆக்கிரமிப்புகளை அகற்றி தூய்மைப்படுத்த வேண்டும் மேலும் சாலைகளில் ஏற்பட்ட பள்ளங்களை சரி செய்ய வேண்டும் கருணாகர நல்லூர் கிராமத்தில் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு வழங்கப்பட்ட மனைகளுக்கு பட்டா வழங்கி அளவிடு செய்து தரவேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார்கள் 


செய்தியாளர்; கே.பாலமுருகன்

No comments:

Post a Comment

*/