விருத்தாசலத்தில் அரசு பேருந்து நடத்துனர் குடிபோதையில் பள்ளி மாணவனிடம் தகராறு!!! - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Monday, 18 April 2022

விருத்தாசலத்தில் அரசு பேருந்து நடத்துனர் குடிபோதையில் பள்ளி மாணவனிடம் தகராறு!!!

விருத்தாசலத்தில் அரசு பேருந்து நடத்துனர் குடிபோதையில் பள்ளி மாணவனிடம் தகராறு, நடவடிக்கை எடுக்க கோரி காவல்துறையிடம் மாணவர்கள் முறையிட்டனர்.


கடலூர் மாவட்டம், விருத்தாசலம் பேருந்து நிலையத்தில் இருந்து பெரியார்நகர்  வழியாக குப்பநத்தம் வரை செல்லும் அரசு பேருந்தில், அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்களை ஏற்றிக்கொண்டு சென்ற போது ஹரி என்ற மாணவனை நடத்துனர் மேலே ஏறு என்று கூறியதாகவும், மாணவனும் சரி என்று கூறியுள்ளார், ஆனால் நடத்துனர் குடிபோதையில் இருந்துள்ளதாக கூறப்படுகிறது, இதனால் நடத்துனருக்கும் மாணவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு நடத்துனர் மாணவனின் சட்டையை கிழித்ததாகவும், அடிக்கமுயன்றதாகவும் கூறப்படுகிறது.


ஆத்திரமடைந்த பள்ளி மாணவர்கள் பேருந்தை காவல் நிலையத்தில் நிறுத்தும் படி கூறியதால் பேருந்தை காவல்நிலையத்தில் நிறுத்தி உதவி காவல் ஆய்வாளரிடம் மாணவர்கள் முறையிட்டனர். உடன் உதவி காவல் ஆய்வாளர் பணிமனையின் மேலாளரிடம் இது குறித்து தகவல் அளிக்கப்பட்டது. சம்மந்தப்பட்ட நடத்துனர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியதால் மீண்டும் மாணவர்கள் மற்றும் இதர பயணிகள் அதே பேருந்தில் அனுப்பிவைக்கப்பட்டனர்.

செய்தியாளர்; இரா.சீனிவாசன்.

No comments:

Post a Comment

*/