குறிஞ்சிப்பாடியில் மாபெரும் இலவச இருதய மருத்துவ முகாம்!!! - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Friday, 29 April 2022

குறிஞ்சிப்பாடியில் மாபெரும் இலவச இருதய மருத்துவ முகாம்!!!


குறிஞ்சிப்பாடியில் மாபெரும் இலவச இருதய மருத்துவ முகாம்.


கடலூர் மாவட்டம், குறிஞ்சிப்பாடி மருத்துவ சேவை அறக்கட்டளை மற்றும் புதுச்சேரி ஆறுபடை வீடு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை இணைந்து நடத்தும் மாபெரும் இலவச இருதய மருத்துவ முகாம் குறிஞ்சிப்பாடி தனியார் திருமண மண்டபத்தில் குறிஞ்சிப்பாடி மருத்துவ சேவை அறக்கட்டளையின் நிறுவனர் மற்றும் தலைவர் சிவகுரு தலைமையில் நடைபெற்றது. 


புதுச்சேரி ஆறுபடை வீடு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையின் இருதய‌ மருத்துவ நிபுணர் டாக்டர் ஜெகன் என் ஹனுமந்த்து மற்றும் பொது மருத்துவர் டாக்டர் சாய் கிருஷ்ணா, டாக்டர் ஶ்ரீ சாந்த் ஆகியோர் கலந்து கொண்டு சிகிச்சை அளித்தனர்.

முகாமில் ஆப்ரேஷன் மேனேஜர் சங்காரவடிவேல், கேம்ப் இன்ஜார்ஜ் செந்தில்குமரன், மார்கெட்டிங் மேனஜர் பஞ்சநாதன், மார்க்கெட்டிங் டீம் அருள் முருகன், கோதண்டபாணி, இசிஜி மற்றும் எக்கோ டெக்னீஷியன்கள் மற்றும் செவிலியர்கள் கலந்து கொண்டனர். இதில் குறிஞ்சிப்பாடி சுற்றியுள்ள கிராமங்களில் உள்ள மக்கள் சிகிச்சை பெற்று பயனடைந்தனர்.

செய்தியாளர்: தே. தனுஷ்

No comments:

Post a Comment

*/