இடிந்து விழும் நிலையில் உள்ள குறிஞ்சிப்பாடி யூனியன் ஆபீஸ் பேருந்து நிலைய பயணியர் நிழற்குடை.
கடலூர் மாவட்டம், குறிஞ்சிப்பாடி யூனியன் ஆபீஸ் பேருந்து நிறுத்தத்தில் பயணியர் நிழற்குடை உள்ளது இந்த நிழற்கூடைக்கு பின்னே குறிஞ்சிப்பாடி மாவட்ட உரிமையியல் மற்றும் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் மற்றும் குறிஞ்சிப்பாடி வட்டார வளர்ச்சி அலுவலகம் ஒரே வளாகத்தில் செயல்பட்டு வருகின்றது வட்டார வளர்ச்சி அலுவலகத்திற்கு வரும் அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் பேருந்து ஏறுவதற்கு முன் நிழல் குடையில் காத்து நிற்பது வழக்கம்.
அப்படி தினமும் நூற்றுக்கும் மேற்பட்டோர் வந்து செல்லும் வட்டார வளர்ச்சி அலுவலகம் அருகே அமைந்துள்ள பயணியர் நிழற்குடை மிகவும் சேதமடைந்து இடிந்து விழும் நிலையில் உள்ளது பொதுமக்கள் அதன் உள்ளே அமர முடியாத நிலையில் உள்ளது சிமென்ட் கட்டைகள் பெயர்ந்து காங்கிரீட் நடுவே உள்ள கம்பிகள் வெளியே தெரியும் அளவிற்கு சேதமடைந்துள்ளது மேலும் இரவு நேரங்களில் பலர் நிழற்குடையை மது அருந்தும் கூடாரமாக பயன்படுத்தி வருகின்றனர் நிழற்குடையின் உள்ளே வாட்டர் பாக்கெட்டுகளை சிகரெட் பாக்கெட்டுகளும் கிடந்து வருகின்றன.
நீதிமன்ற வளாக அருகே உள்ள நிழல் குடையில் இது போன்ற சம்பவம் நடந்து வருவது அப்பகுதி மக்களிடையே முகச்சுளிப்பை ஏற்படுத்தி உள்ளது தினமும் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் பணிபுரியும் அரசு அதிகாரிகள் இந்த நிழற்குடையை கடந்து செல்கின்றனர் கோடை வெயில் கடுமையாக வாட்டி வரும் நிலையில் பொதுமக்கள் சற்று வெயிலின் தாக்கத்தில் இருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ள நிழற் குடையை பயன்படுத்தி வருகின்றனர்.
அப்படிப்பட்ட பேருந்து நிறுத்த நிழற்குடை பொதுமக்களுக்கு பாதுகாப்பற்ற சூழலில் உள்ளதாக அப்பகுதி பொதுமக்கள் தெரிவிக்கின்றனர் எனவே துறை சார்ந்த அதிகாரிகள் இதன் மீது கவனம் கூர்ந்த பயணியர் நிழற்குடை சரிசெய்தால் பொதுமக்கள் பலர் பயன் அடைவர் என்பது அப்பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது.


No comments:
Post a Comment