50 ஆண்டுகால கோரிக்கையை நிறைவேற்ற வலியுறுத்தி இருளர் பழங்குடி மக்கள் 100க்கும் மேற்பட்டோர் விருத்தாசலம் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம்.
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு பழங்குடி மக்கள் விடுதலை கட்சி சார்பில் இலவச வீட்டு மனை பட்டா கேட்டு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில் வண்ணான்குடிகாடு ராஜேந்திரபட்டினம், சத்தியவாடி, சின்னவடவாடி, கிளிமங்கலம், மோசட்டை, கருவேப்பிலங்குறிச்சி, சாவடிகுப்பம், குமாரமங்கலம் பரவலூர், பரூர், சாத்தமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் பழங்குடி இருளர் மக்கள் 50 ஆண்டு காலமாக வாழ்ந்து வருவதாகவும் இலவச வீட்டு மனை பட்டா கேட்டு பலமுறை சம்பந்தப்பட்ட அலுவலகத்தில் மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்காத அதிகாரிகளை கண்டித்து நூற்றுக்கும் மேற்பட்ட இருளர் சமூக மக்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

No comments:
Post a Comment