புவனகிரி குறிஞ்சிப்பாடி சாலையில் மே 1ஆம் தேதி ஒரு நாள் மட்டும் போக்குவரத்து மாற்றம் - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Thursday, 28 April 2022

புவனகிரி குறிஞ்சிப்பாடி சாலையில் மே 1ஆம் தேதி ஒரு நாள் மட்டும் போக்குவரத்து மாற்றம்

புவனகிரி குறிஞ்சிப்பாடி சாலையில்  மே 1ஆம் தேதி ஒரு நாள் மட்டும் போக்குவரத்து மாற்றம் குறிஞ்சிப்பாடி நெடுஞ்சாலைத்துறை உதவி இயக்குனர் பரமேஸ்வரி அறிவிப்பு அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் பின்வருமாறு  !!!



கடலூர் மாவட்டம், குறிஞ்சிப்பாடி நெடுஞ்சாலைத்துறை உட்கோட்டம் பரங்கிப்பேட்டை பிரிவு சி.ஐ.டி. 2020- 21 திட்டத்தின்கீழ் புவனகிரி குறிஞ்சிப்பாடி சாலை விரிவாக்கப் பணிகள் மற்றும் சாலையின் குறுக்கே பைப்லைன் போன்ற பணிகள் நடந்து வருவதால் பணியில் இடையூறு இல்லாமல் விரைந்து முடிக்கும் வகையில் குறிஞ்சிப்பாடியில் இருந்து புவனகிரி பயணியர் விடுதி அலுவலகம் வரையில் பணிகள் மேற்கொள்ள உள்ளனர்.

எனவே வரும் மே 1 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை  6.00 மணி முதல்  ஒரு நாள் முழுவதும் இந்த சாலையில் கனரக வாகனங்கள் போக்குவரத்து முற்றிலும் தடை செய்யவும் இலகுரக வாகனங்கள் புவனகிரியில் இருந்து பூ .மனவெளி மருதூர் கரை மேடு வழியாக வடலூர் சென்று அடைவதற்கு ஏதுவாக போக்குவரத்து வழித்தடத்தில் மாற்றம் செய்துள்ளனர்  அன்றைய ஒருநாள் மட்டும் பொதுமக்கள் ஒத்துழைப்பு தருவதுடன் மாற்று வழியை பயன்படுத்தவும் கேட்டுக்கொண்டுள்ளார்.

இந்தத் தகவலை நெடுஞ்சாலை துறை உதவி இயக்குனர் பரமேஸ்வரி அவர்கள் சிதம்பரம் வருவாய் கோட்டாட்சியர் ரவி  அவர்கள்    புவனகிரி வருவாய் வட்டாட்சியர் ரம்யா   அவர்கள்       மற்றும் சிதம்பரம் நெய்வேலி துணை காவல் கண்காணிப்பாளர்                  உள்ளிட்ட அதிகாரிகள்  தெரிவித்துள்ளனர்

No comments:

Post a Comment

*/