மேல் புவனகிரி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாநிலம் தழுவிய பெருந்திரள் ஆர்ப்பாட்டம் - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Monday, 25 April 2022

மேல் புவனகிரி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாநிலம் தழுவிய பெருந்திரள் ஆர்ப்பாட்டம்

தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாநிலம் தழுவிய பெருந்திரள் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது !!!!


கடலூர் மாவட்டம், மேல் புவனகிரி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாநிலம் தழுவிய பெருந்திரள் ஆர்ப்பாட்டம் ஜீ. சேகர்       மாவட்ட குழு.  விவசாய தொழிலாளர் சங்கம் அவர்களின் தலைமையில்    நடைபெற்றது ஏ.கே. ராஜேந்திரன் நகர செயலாளர் சிபிஐ ஜீ. பூபாலன் வட்டச் செயலாளர் சிபிஐ எஸ். ராஜேந்திரன் மாவட்ட குழு சிபிஐ  ஜீ .மணிப் பிள்ளை விவசாய சங்கம் ஆகியோர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு முன்னிலை வகித்தனர். 


100 நாள் வேலை செய்யும் தொழிலாளர்கள் காலை 7.00 மணிக்கு கட்டாயம் வர வேண்டும் என்பதனை கண்டித்தும் நூறு நாள் வேலைத் திட்டத்திற்கு தற்போது அரசு அறிவித்துள்ள சம்பளம் ரூபாய் 282 ரூபாயை  உடனே வழங்கிட வேண்டியும் நூறு நாள் வேலைத் திட்டத்தின் பணி செய்ய அட்டை ஜாப் கார்டு (Jopcard) கேட்பவர்களிடம் வீட்டு வரி கட்டினால் தான் அட்டை வழங்கப்படும் என்று அலைக் கழிப்பதை கண்டித்தும் 


100 நாள் வேலை திட்டத்தில் பல்வேறு பஞ்சாயத்துக்களில் 20 நாள் அல்லது 30 நாட்கள் கூட வேலை கொடுக்காமல் இருப்பதை கண்டித்தும் வேலை நாட்களை 100 நாள் என்பதை மாற்றி                 200 நாட்களாக உயர்த்தி  நாளொன்றுக்கு 600 ரூபாய் சம்பளம் வழங்க கோரியும் 


நூறு நாள் வேலைத் திட்டத்திற்கு ஒதுக்கப்படும் நிதியை படிப்படியாக குறைத்து வரும் ஒன்றிய அரசை கண்டித்தும் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ராஜதுரை வட்டத் தலைவர் ஏஐடியுசி          எஸ் .ராமு ஆகியோர் கலந்து கொண்டு கண்டன முழக்கங்களை எழுப்பினர்.

செய்தியாளர்; வீ. சக்திவேல் 

No comments:

Post a Comment

*/