கடலூர் மாவட்டம் கீரப்பாளையம் ஊராட்சி ஒன்றியம் அலுவலகம் முன்பு தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் நடைபெற்றது கண்டன ஆர்ப்பாட்டத்தில் வி .மணவாளன் மாவட்ட துணைச் செயலாளர் இ.வி.தொ.ச அவர்கள் கலந்து கொண்டு தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். ஆர் .காமராஜ் ஆ.ஆகியோர் முன்னிலை வகித்து ஆர்ப்பாட்ட விளக்க உரையாற்றினார்.அப்போது 100 நாள் வேலை திட்டத்தில் வேலை செய்யும் பணியாளர்களுக்கு அரசு அறிவித்த ஊதியம் ரூபாய் 282யை உடனே வழங்கிட கோரியும் நூறு நாள் வேலைத் திட்டத்தில் வேலை செய்யும் பணியாளர்களுக்கு நாளொன்றுக்கு ரூபாய் 600 ஆக உயர்த்தி வழங்க கோரியும்
நூறு நாள் வேலைத் திட்டத்தில் வருகைப் பதிவு செய்யும் நேரத்தை காலை 7 .00மணி என்பதை 9.00 மணி என நிர்ணயம் செய்ய கோரியும் 100 நாள் வேலையை 200 நாள் ஆக உயர்த்தி பணியாளர்களை கட்டுமான பணிக்கு இத்திட்டத்தினை பயன்படுத்தாமல் கிராமப்புற ஏரி குளம் வாய்க்கால் மரம் நடுதல் மற்றும் சாலைகளை புரணமைத்திடவும் 100 நாள் வேலைக்கான அடையாள அட்டை கோரும் அனைவருக்கும் அடையாள அட்டை வழங்க வலியுறுத்தியும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு கோரிக்கையாக கோஷங்கள் எழுப்பினர்.
கண்டன ஆர்ப்பாட்டத்தில் டி .மணிவாசகம் மாநில நிர்வாகக்குழு பி.எம் .சேகர் மாவட்ட நிர்வாக குழு குமரன். குமாரி குமார் இராஜேந்திரன் பன்னீர்செல்வம் தியாகராஜன் புலவன் சுந்தரமூர்த்தி அறிவழகன் சையது ஆகிய தமிழ் மாநில விவசாய தொழிலாளர்கள் பெரும் திரளாக கலந்து கொண்டனர்.
செய்தியாளர்; வீ. சக்திவேல்

No comments:
Post a Comment