கடலூர் மாவட்டத்தில், அ.தி.மு.க கடலூர் வடக்கு மாவட்ட செயலாளர் பதவிக்கு கடலூர் பாதிரி குப்பத்தில் உள்ள அதிமுக அலுவலகத்தில் முன்னாள் அமைச்சர் எம் சி சம்பத் வேட்பு மனு தாக்கல் செய்தார்.
இதனைத் தொடர்ந்து அதே கட்சியை சேர்ந்த காசிநாதன் என்பவரும் வேட்பு மனு தாக்கல் செய்ய வந்தார் இதனை பார்த்த முன்னாள் அமைச்சர் ஆதரவாளர்கள் அவரை தடுத்து நிறுத்தினர்.
இதனால் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது இதனை பார்த்த செய்தியாளர் ஒருவர் படம் பிடிக்க முயன்றபோது அவரது செல்போனை பறித்துக் கொலை மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவமும் நடைபெற்றது. இதனால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

No comments:
Post a Comment