குறிஞ்சிப்பாடி தீயணைப்புத் துறை சார்பாக தீ தொண்டு நாள் வார விழா.
கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் நிலையம் ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 14 முதல் ஏப்ரல் 20 வரை தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறையின் சார்பாக தீ தொண்டு நாள் வார விழா அனுசரிக்கப்படுகிறது.
இதுதொடர்பாக 15 -4- 2022 இன்று குறிஞ்சிப்பாடி பேருந்து நிலையத்தில் நிலைய அலுவலர் கோ. சங்கர் அவர்கள் தலைமையில் நிலைய அலுவலர் போக்குவரத்து சே.மணிவேல் சிறப்பு நிலை அலுவலர் ப.சிவக்கொழுந்து ராதாகிருஷ்ணன் ஜெயக்குமார் ஆகியோர் கலந்துகொண்டு பொதுமக்களுக்கு தீ விபத்து பற்றிய செயல்முறை விளக்கம் மற்றும் விழிப்புணர்வு பிரச்சாரம் செய்து விழிப்புணர்வு துண்டு பிரசுரம் வழங்கப்பட்டது.
.செய்தியாளர்; தே.தனுஷ்

No comments:
Post a Comment