தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும்- ஐக்கிய ஜனதா தளம் தமிழ்நாடு மாநிலத் தலைவர் மணி நந்தன் தெரிவித்தார். - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Friday, 15 April 2022

தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும்- ஐக்கிய ஜனதா தளம் தமிழ்நாடு மாநிலத் தலைவர் மணி நந்தன் தெரிவித்தார்.

தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும்-ஐக்கிய ஜனதா தளம் தமிழ்நாடு மாநிலத் தலைவர் மணி நந்தன் தெரிவித்தார்.


கடலூர் மாவட்டம் மற்றும் சிதம்பரம் பகுதியில்  பல்வேறு இடங்களில் அம்பேத்கர்  பிறந்தநாளை கொண்டாடும் வகையில் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய தமிழ்நாடு ஜக்கிய ஜனதா தளம் மாநில தலைவர் மணிநந்தன்  சுற்றுப்பயணம் மேற்கொண்டார் 


அப்போது சிதம்பரத்தில் அவர் செய்தியாளர்களிடம்  தெரிவித்ததாவது:-


கொரோனா தொற்றுபரவல்தடுப்பு காரணமாக தமிழ்நாட்டில் மக்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வருகின்றனர் .   இந்நிலையில் அவர்களை காப்பாற்றி  சீரமைக்க வேண்டிய தமிழ்நாடு அரசு சொத்து வரியை உயர்த்திமக்களை வாட்டி வதைக்கும் சாதாரண கிராம மற்றும் பாமர மக்களுக்கும் கூட்டுறவு வங்கிகடன் கிடைக்கும் வகையில் தமிழ்நாடு அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.


கூட்டுறவு வங்கிகளில் பெறப்பட்ட நகை கடன் தள்ளுபடியில்  பாரபட்சம் காட்டப்படுகிறது . கிராமத்தில் உள்ள படித்த இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்க வேண்டும் 


அனைத்து கிராமங்களிலும் இணையதள வசதி ஏற்படுத்தப்பட வேண்டும் தமிழ்நாட்டில் பூரண மதுவிலக்கு அமல்படுத்த வேண்டும், மதுவால் வரும் வருமானத்தை வைத்து மக்களுக்கு இலவச பொருள்களை வழங்கக்கூடாது. மதுவால் வரும் வருமானத்தை வைத்து, தாலிக்கு தங்கம் கொடுக்க வேண்டாம். 

தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தி மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படும் வகையில் ஒவ்வொரு மாவட்டத்திலும் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்படும் .


அகில இந்திய ஜனதா தளம் (ஐக்கியம்) தலைவர் ராஜீவ் ரஞ்சன் சிங் மற்றும் பீகார் மாநில முதலமைச்சர் நிதீஷ் குமார் உள்ளிட்டோரும் பங்கேற்கும் வகையில் வரும் ஜூன் அல்லது ஜூலை மாதத்தில் தமிழ்நாடு ஜனதா தளம் கட்சி(ஐக்கியம்) மாநாடு ஒன்றை தமிழ்நாட்டில் சென்னை கோயம்புத்தூர் சேலம் உள்ளிட்ட ஏதேனும் ஒரு பகுதியில் நடைபெற ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இவ்வாறு தமிழ்நாடு ஜனதா தளம் ஐக்கியம் மாநிலத் தலைவர் மணிநந்தன் தெரிவித்தார் 


உடனிருந்தவர் மாநில துணை தலைவர், டி. தங்கவேல் நாடார்,மாநில துணை தலைவர் எ. ஆர். பார்த்திபன் மாநிலதுணைதலைவர், செல்லா, ராமசந்திரன், மாநில எஸ்சி, எஸ்டி, அணி அமைப்பாளர், எஸ், சம்பத்குமார் கடலூர் மாவட்ட தலைவர் கே, செந்தில்முருகன் கடலூர் மாவட்டஎஸ்.சி /எஸ்டி.அணி அமைப்பாளர்,நந்தா (எ )முருகானந்தம் கடலூர் மாவட்ட வழக்கறிஞர் பிரிவு அமைப்பாளர், எண். பி, புருஷோத்தமன் மற்றும் கட்சி நிர்வாகிகள் உடன் இருந்தனர்.


செய்தியாளர் ;- மா.பாலாஜி 



No comments:

Post a Comment

*/