பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் எ.வ.வேலு விருத்தாசலத்தில் சாலைப்பணிகளை பார்வையிட்டு மரக்கன்று நட்டுவைத்தார். உடன் தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் உடனிருந்தனர்.
கடலூர் மாவட்டம், விருத்தாசலத்தில் போக்குவரத்து நெரிசலை குறைப்பதர்க்காக புறவழி சாலையில் மண் பரிசோதனை செய்யப்பட்டு 37 கோடி ரூபாய் செலவில் மேம்பாலம் கட்டுவதற்கான ஆயத்தபணிகள், சாலை விரிவாக்க பணி, சாலையின் நடுவே தடுப்பு சுவர் பணி, மற்றும் விருத்தாசலம் கடலூர் வரை உள்ள 13 இடங்களில் விபத்து பகுதிகளை மேம்பாட்டு பணி, நான்கு வழி பாதை சாலைப்பணி உள்ளிட்ட பணிகளை பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் எ.வ.வேலு பார்வையிட்டு மரக்கன்று நாட்டுவைத்தார்.
இந்த ஆய்வின் போது தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் சி.வெ.கணேசன், கட்டுமானம் மற்றும் பராமரிப்பு தலைமை பொறியாளர் சந்திரசேகர், தேசிய நெடுஞ்சாலை தலைமை பொறியாளர் பாலமுருகன், வட்ட கண்காணிப்பு பொறியாளர் பன்னீர்செல்வம், சத்யபிரகாஷ், கோட்டப் பொறியாளர் ரவி, பரந்தாமன், தரக்கட்டுப்பாட்டு கோட்ட பொறியாளர் இளங்கோ, உதவி கோட்ட பொறியாளர் கவிதா, உதவி பொறியாளர் சரவணன், ரவிச்சந்திரன், செந்தமிழ்செல்வன் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
செய்தியாளர்; இரா.சீனிவாசன்


No comments:
Post a Comment