கடலூர் மாவட்டம், வேப்பூர் அருகே, புல்லூர் கிராமத்தில் மகள் கிணற்றில் இறந்து கிடந்ததில் சந்தேகம் உள்ளதாக தாய் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.
சேலம் மாவட்டம், ஆத்தூர் அடுத்த களராம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த நல்லதம்பி மகன் வெங்கடேசன்,(வயது 48) என்பவருக்கும் கடலூர் மாவட்டம், திட்டக்குடி வட்டம், மேல் ஆதனூர் கிராமத்தை சேர்ந்த சுப்ரமணியன் மகள் சுஜாதா, (வயது32) இவர்களுக்கு கடந்த 13 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடைபெற்றது , 2 மகன்கள் உள்ளனர்.
இவர்களுக்குள் திருமணமானதிலிருந்து கருத்து வேறுபாடு காரணமாக அவ்வப்போது சண்டை ஏற்பட்டு வந்தது.கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் வேப்பூர் அடுத்த பில்லூர் பாகுளம் பகுதியில் விவசாய நிலத்தை குத்தகை எடுத்து விவசாயம் செய்து வந்தனர்.
இந்நிலையில், கடந்த 15ம் தேதி சுஜாதா வீட்டை விட்டு வெளியே சென்றவர் மீண்டும் வீட்டிற்கு திரும்ப வரவில்லை. தொடர்ந்து, பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.ஏப்ரல் 23 ,ந் தேதி நேற்று காலை 8:00 மணியளவில் வெங்கடேசன் வயலுக்கு தண்ணீர் பாய்ச்ச சென்ற போது, கிணற்றில் சுஜாதா இறந்த நிலையில் மிதந்து கிடந்தார்.
இது குறித்த தகவலறிந்து வந்த வேப்பூர் போலீசார், பிரேதத்தை மீட்டு விழுப்புரம் மாவட்டம், முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து சுஜாதாவின் தாய் வளர்மதி (வயது 60) கொடுத்த புகாரின்பேரில் வேப்பூர் போலீசார் வழக்குப் பதிந்து மேலும் விசாரணை செய்து வருகின்றனர்.

No comments:
Post a Comment