கடலூர் மாவட்டம், குறிஞ்சிப்பாடி வட்டம் மீனாட்சிப்பேட்டை கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் பள்ளி மேலாண்மைக் குழு மறுகட்டமைப்பு கூட்டம் பள்ளி தலைமையாசிரியர் வே.கௌரி தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் சிறப்பு கண்காணிப்பாளராக ராமநாதகுப்பம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர் முத்துலட்சுமி கலந்து கொண்டு முக்கிய கருத்துக்களை எடுத்துரைத்தார்.
பள்ளியின் சக ஆசிரியர்களான வரதராஜன், தனபால், ஞான சங்கர், ரேணுகாதேவி, லதா, காந்திமதி ஆகியோர் கலந்து கொண்டு பள்ளி மேலாண்மைக் குழு குறித்து எடுத்துரைத்து சிறப்பித்தனர். இந்த கூட்டத்தில் தலைவராக தனலட்சுமி, துணை தலைவராக மணிமேகலை, கலைவாணி, செயலாளராக வே.கௌரி, வார்டு உறுப்பினராக குறிஞ்சிப்பாடி பேரூராட்சி 4 வது வார்டு கவுன்சிலர் எஸ்பி கண்ணன் மற்றும் 2 வது வார்டு கவுன்சிலர் வாசுகி ராமலிங்கம், ஆசிரியர் உறுப்பினராக காந்திமதி, கல்வி ஆர்வலராக கா.கலைவாணன் மற்றும் பள்ளியில் படிக்கும் மாணவர்களின் பெற்றோர்கள் 14 பேர் என மொத்தம் 20 பேர் உறுப்பினர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது.
இந்த கூட்டத்தில் இல்லம் தேடி கல்வி தன்னார்வல ஆசிரியர்கள், மாணவர்களின் பெற்றோர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
செய்தியாளர்; தே. தனுஷ்.

No comments:
Post a Comment