கடலூர் மாவட்டம், மஞ்சக்குப்பம் டவுன் ஹாலில் பல்துறை பணிவிளக்க கண்காட்சி இன்று காலை தொடங்கியது.இதனை வேளாண்மைத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்,தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் சி.வெ.கணேசன் ஆகியோர் தொடங்கி வைத்தனர். இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் பாலசுப்ரமணியம் மற்றும் துணை ஆட்சியர் மாநகராட்சி மேயர், துணை மேயர் ஆகியோர் கலந்து கொண்டனர்.
மேலும் பள்ளி அளவில் நடத்தப்பட்ட பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பரிசுகள், பதக்கங்கள் வழங்கினர்.இந்த நிகழ்ச்சியின் போது கடலூர் எஸ்.பி சக்தி கணேசனுக்கு மேடையில் இருக்கை ஏற்பாடு செய்யவில்லை. இதன் காரணமாக வெட்ட வெயிலில் நிகழ்ச்சி முடியும் வரை நின்ற படியே இருந்தார். அவருடன் காவல்துறை உயர் அதிகாரிகளும் உடன் நின்றனர். இதனைத்தொடர்ந்து மாநகராட்சி அலுவலகத்தில் மாமன்ற உறுப்பினர்களுடன் வளர்ச்சிப்பணிகள் குறித்தான கூட்டம் நடைபெற்றது.இதில் 45 மாமன்ற உறுப்பினர்களில் 6 திமுக மாமன்ற உறுப்பினர்கள் பங்கேற்கவில்லை. மேலும் கூட்டம் துவங்கியதும் மாநகராட்சி அலுவலர்களும் வெளியேற்றப்பட்டனர்
பின்னர் ஒரு மணி நேரத்திற்கு மேலாக நடைபெற்ற கூட்டத்திற்கு பின்னர், செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் 60 கோடிக்கு மேல் வரி வசூல் செய்யாமல் பாக்கி உள்ளதாகவும்,கடந்த 10 வருடத்தில் குப்பைகளே அகற்றப்படாத நிலையில் 10 வருடத்தில் எந்தப்பணியும் நடைபெறவில்லை, அவற்றை முடிக்கவே 2 ஆண்டுகள் தேவைப்படும் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.




No comments:
Post a Comment