நேற்று 14-வது வார்டு உறுப்பினர் சுரேந்தர் மற்றும் தனபால் தலைமையில் திட்டக்குடி நகராட்சி நிர்வாகத்தால் 24-வார்டுகளிலும் உள்ள பொதுமக்களுக்கு கிடைக்கவேண்டிய அத்தியாவசிய தேவைகள் மின் விளக்குகள், குடிநீர், சாக்கடை சீரமைப்பு ஆகியவை பொதுமக்களுக்கு கிடைக்கவில்லை என்பதால் அல்வா கொடுத்து நூதன முறையில் போராட்டம் நடத்தினார்கள். அதனைக் கண்டிக்கும் விதமாக சங்கு முழக்கமிட்டு கருப்பு துண்டு அணிந்து வந்தும் போராட்டம் நடத்தினார்கள்.
கூட்டத்தில் பேசிய போது திட்டக்குடி நகராட்சியில் நடைபெற்ற முதல் கூட்டத்தில் நகராட்சி எந்த நிலையில் உள்ளது.எவ்வளவு கடனில் உள்ளது என்பதனையும் விவாதிக்கப்பட்டது. ஆடம்பர போக்கைக் கொண்டு முதல் மன்றத்தில் விவாதம் செய்யப்பட்டது. திட்டக்குடி நகராட்சி நிர்வாகத்தில் 1- கோடியே 34 லட்சம் கடனில் உள்ளதாகவும் ஆணையர் மற்றும் தலைவர் உள்ளிட்ட தலைவர்களுக்கு புதிய வாகனம் வாங்க வேண்டும் என்று மன்றம் அனுமதிக்கலாம் என்று ஒரு தீர்மானத்தை கொண்டு வந்தார்கள்.
அதனை மக்கள் பிரதிநிதிகளாக திராவிட முன்னேற்றக் கழகம் தற்போது திட்டக்குடி நகராட்சி மன்றத்தில் இருக்கும் சூழ்நிலைகளை கருத்தில் கொண்டு தற்போது திட்டக்குடி நகராட்சியின் நீர்நிலை மோசமாக உள்ளதால் ஆடம்பரமான செலவினை பிறகு பார்த்துக் கொள்ளலாம் இப்போது உள்ள குடிநீர் பிரச்சனை, சாலை பிரச்சனை, மின்சாரம் பிரச்சனைகளை முதலில் சரி செய்ய வேண்டும்.என்று சொன்னதினால் அந்த மன்றத்தில் யாரெல்லாம் எதிர்கருத்து கூறினார்களோ அவர்களையெல்லாம் கழகத்தின் உறுப்பினராக இருந்தாலும் அவர்களைப் புறந்தள்ளி வைக்க வேண்டும். அவர்களுடைய வார்டுகளில் இருக்கும் பிரச்சினைகளை சரி செய்யக்கூடாது என்று நகராட்சி மன்றத் தலைவரும் ஆணையரும் திட்டவட்டமாக கூறியதாகவும்.
கவுன்சிலர் சுரேந்தர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார் அவர் கூறியதாவது எங்களுக்கு வாக்களித்து திராவிட முன்னேற்ற கழகத்தினை வெற்றி பெற செய்து தளபதியாரின் ஆட்சி நல்லாட்சி மலர வேண்டும். திட்டக்குடி நகர மன்றத்துக்கு வரவழைத்து 5 அம்ச கோரிக்கை மனுக்கள் பெற்றுள்ளோம் இந்த மனுக்களை மாவட்ட ஆட்சியர் அவர்களுக்கும் முதலமைச்சர் தனிப்பிரிவுக்கும் அனுப்பியுள்ளோம்.தளபதியாரின் ஆட்சிக்கு களங்கத்தை ஏற்படுத்தும் வகையில் பொது நிதியில் பெரிய அளவுக்கு முறைகேடுகளில் ஈடுபட்டிருக்கும் திட்டக்குடி நகராட்சி நநிர்வாகத்தில் நடக்கும் ஊழல்களை மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் சிறப்பு அதிகாரிகள் கொண்டு வரவு-செலவு ஆய்வு செய்ய வேண்டும். என்று திராவிட முன்னேற்ற கழகத்தை கேட்டுக்கொள்கின்றோம்.
தளபதியார் அனைத்து மக்களுக்கான தளபதி மக்களின் துயரை துடைக்கின்ற தளபதி இன்றைய காலகட்டத்தில் அவருடைய நல்ல செயல்பாட்டுக்கு கலங்கத்தை ஏற்படுத்துகின்ற நிர்வாகத்தின் மீது கடுமையாக நடவடிக்கை எடுக்க வேண்டும். தேர்தலின்போது திராவிட முன்னேற்றக் கழகத்தை சார்ந்த வேட்பாளர்களை தோற்கடித்த ஒரு தனிப்பட்ட நபருக்கு இந்த மன்றத்தின் மிகப் பெரிய முக்கியத்துவம் கிடைக்க என்ன காரணம் அளிக்கப்படுகின்றது.அந்த முக்கியத்துவம் கிடைக்க வேண்டும் ஏனென்றால் ஐந்துக்கும் மேற்பட்ட திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளர்கள் தோல்வியுற்றனர்.இதற்கு காரணமானவர்களை முன்னிறுத்தி வேலைப்பாடுகள் செய்து கொண்டிருக்கின்றனர் இதற்கு நம் திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு என்ன பதில் கூறப் போகிறார்கள் . இதைக்கண்டு எங்களால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை தளபதியார் நேரடியாக இதில் தலையிட்டு திட்டக்குடி நகராட்சி மக்களுக்கு நல்வழி காட்ட வேண்டும் என்று திட்டக்குடி நகராட்சி 14வது வார்டு உறுப்பினர் சுரேந்தர் கூறினார்.


No comments:
Post a Comment