கடலூர் மாவட்டம் வடலூர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நுகர்வோர் பாதுகாப்பு பேரவை சார்பில் எரிவாயு விழிப்புணர்வு மற்றும் கோடை காலத்தில் தீ விபத்தை தவிர்ப்பது குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது
வடலூர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியர் சரவண செல்வி அவர்கள் வரவேற்புரை வழங்க நுகர்வோர் பாதுகாப்பு பேரவை தலைவர் கோவி. கல்வி ராயர் அவர்கள் தலைமையில் உமா கேஸ் நிறுவனத்தின் உரிமையாளர் ராமகிருஷ்ணன்அவர்கள் வீட்டு உபயோகத்திற்கு பயன்படுத்தும் எரிவாயுவை எப்படி பாதுகாப்பான முறையில் பயன்படுத்துவது மற்றும் கோடை காலத்தில் ஏற்படும் தீ விபத்தை எப்படி தடுப்பது குறித்த விளக்கங்களை பள்ளி மாணவிகளுக்கு வழங்கினார்.
இதனை தொடர்ந்து குறிஞ்சிப்பாடி தீயணைப்பு மற்றும் மீட்பு நிலைய அலுவலர் சங்கர் அவர்கள் தலைமையிலான மீட்புக்குழுவினர் செய்முறை விளக்கத்துடன் கூடிய விழிப்புணர்வை மாணவிகள் மத்தியில் செய்துகாட்டி விளக்கமாக எடுத்துரைத்தனர்.
அருள்ஜோதி அரக்கட்டளை தலைவரும் நுகர்வோர் பாதுகாப்பு பேரவை மகளிர் பிரிவு தலைவர் வினோதினி அவர்களும் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் பாண்டி மண்டல மேலாளர் வில்லியம் கெரி அவர்களும் கலந்துகொண்டு மாணவிகளுக்கு விரிவான விளக்கவுரை வழங்கினார்.
இதில் கலந்து கொண்ட அரசுப் பள்ளி மாணவிகளுக்கு வினா விடை போட்டிகள் நடத்தப்பட்டு சிறப்பான முறையில் கேள்விகளுக்கு பதில் அளித்து வெற்றி பெற்ற மாணவிகளுக்கு குறிஞ்சிப்பாடி வட்டாட்சியர் சுரேஷ் குமார் அவர்கள் பரிசுகளை வழங்கி சிறப்பித்தார்.
இந்நிகழ்வில் நுகர்வோர் பாதுகாப்பு பேரவை நிர்வாகிகள் உமா கேஸ் நிறுவன பணியாளர்கள் வடலூர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி ஆசிரியர்கள் பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
செய்தியாளர்; தே. தனுஷ்.

No comments:
Post a Comment