திட்டக்குடி அருகே அரசு பேருந்து ஓட்டுனர் மீது இளைஞர்கள் தாக்குதல் - அரசு பஸ் ஊழியர்கள் திடீர் போராட்டம்!!! - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Thursday, 21 April 2022

திட்டக்குடி அருகே அரசு பேருந்து ஓட்டுனர் மீது இளைஞர்கள் தாக்குதல் - அரசு பஸ் ஊழியர்கள் திடீர் போராட்டம்!!!

கடலூர் மாவட்டம் திட்டக்குடி அடுத்து ஆ.பாளையம் பரபரப்பு.நேற்று இரவு பஸ் நம்பர் 341A கள்ளக்குறிச்சி பேருந்து ஓட்டுனரைதாக்கி வீட்டுக்குள் வைத்து 50மேற்பட்ட இளைஞர்கள் சரமாரியாகஅடி உதைத்தனர் ஓட்டுநர் கவலைக்கிடமாக திட்டக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு மேல்சிகிச்சைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.  


கடலூர் மாவட்டம், கள்ளக்குறிச்சியில் இருந்து திட்டக்குடிக்கு அரசு பஸ் ஒன்று பயணிகளுடன் நேற்று இரவு சென்றுகொண்டிருந்தது. ஆ.பாளையம் என்ற இடத்தில் வந்தபோது அந்த ஊரில் நடந்த கோவில் திருவிழா ஊர்வலம் சாலையில் சென்றது. எதிர்பாராதவிதமாக சாமி ஊர்வலத்தில் பஸ் சென்றது. இதில் ஊர்வலத்தில் எடுத்துவரப்பட்ட சாமி சிலை சேதமடைந்ததாக கூறப்படுகிறது.


இதில் ஆத்திரமடைந்த ஊர்வலத்தில் வந்த 50 மேற்பட்ட இளைஞர்கள் அரசு பஸ்சின் டிரைவர் பெரியசாமியை வீட்டுக்குள் வைத்து சரமாரியாக சரமாரியாக தாக்கினர். அடித்ததில் காயமடைந்த அவர் மயங்கி விழுந்தார் நடத்துனர் அங்கிருந்து தப்பித்து ஓடி காவல்துறையிடம் தகவல் கொடுத்தார் காவல்துறையினர் விரைந்து வந்து அவரை மீட்டு திட்டக்குடி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர் திட்டக்குடி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு பின்னர் மேல் சிகிச்சைக்காக பெரம்பலூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். 

அரசு பஸ் டிரைவர் தாக்கப்பட்ட சம்பவம் திட்டக்குடி அரசு பஸ் டெப்போவில் இருந்த மற்ற ஊழியர்களுக்கு தெரியவந்தது. இதனால் ஆத்திரமடைந்த அவர்கள் இன்று காலை பஸ்களை இயக்காமல் நிறுத்திவிட்டனர். எங்களது ஊழியர்களை அடித்த பாளையத்தை சேர்ந்த இளைஞர்களை கைது செய்யும் வரை நாங்கள் பேருந்து எடுக்க மாட்டோம் என்று மூன்று மணி நேரமாக போராட்டம் நடத்தினார்கள் தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த போராட்டம் பற்றி தகவல் அறிந்த போக்குவரத்து கழக உயர் அதிகாரிகள் மற்றும் போலீசார் போராட்டத்தில் ஈடுபட்ட அரசு பஸ் டிரைவர்கள் மற்றும் கண்டக்டர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். 


பேச்சுவார்த்தையில் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றுவரும் டிரைவரை தாக்கியவர்கள் யார் என்பதை கண்டறிந்து அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர்கள் உறுதியளித்தனர். இதையடுத்து சிலமணிநேர இடைவெளியில் பஸ்கள் இயக்கப்பட்டன.


செய்தியாளர்; செ. பாலமுருகன்.

No comments:

Post a Comment

*/