பொது சுகாதார துறை மூலம் புகையிலை தடுப்பு விழிப்புணர்வு மற்றும் துண்டு பிரசுரங்கள் வினியோகம் கடலூர் மாவட்ட பொது சுகாதாரத் துறை சார்பில் நடைபெற்றது.
கடலூரில் பொது சுகாதார துறை மூலம் புகையிலை தடுப்பு விழிப்புணர்வு மற்றும் துண்டு பிரசுரங்கள் வினியோகம் கடலூர்மாவட்ட பொது சுகாதாரத் துறை சார்பில் கடலூர் மாநகராட்சிக்குட்பட்ட சாவடி, செம்மண்டலம் மற்றும் கம்மியம்பேட்டை ஆகிய பகுதிகளில் துணை இயக்குனர் சுகாதாரப்பணிகள் நேர்முக உதவியாளர் ஹரிகிருஷ்ணன் தலைமையில் சுகாதார ஆய்வாளர்கள் கொண்ட குழு மூலம் பொது இடங்களில் புகை பிடிப்பதற்கு அபராதம் விதிப்பது மேலும் புகை பிடிப்பதினால் ஏற்படும் தீமைகள் பற்றி விழிப்புணர்வு அளிக்கப்பட்டது.
அப்பகுதிகளில் உள்ள கடைகளில் புகையிலை தடுப்பு விழிப்புணர்வு துண்டு பிரசுரம் வழங்கப்பட்டது கடைகளில் புகையிலை தடுப்பு குறித்த விழிப்புணர்வு நோட்டீஸ் ஒட்டுவதற்கு அறிவுறுத்தப்பட்டது மேலும் பொதுமக்களுக்கு புகையிலை தடுப்பு விதிகளை கடைப்பிடிக்காத கடைகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது இதில் சுகாதார ஆய்வாளர்கள் துளசிதாஸ், குணசேகரன், அருண் குமார் மற்றும் குமார் சிவ கண்டன் ஆகியோர் உடனிருந்தனர்.


No comments:
Post a Comment