கடலூர் மாவட்டம் திட்டக்குடி வட்டம் போத்திரமங்கலத்தில் அமைந்துள்ள சட்டமேதை டாக்டர் அம்பேத்காரின் திருவுருவச்சிலைக்கு தமிழக முதல்வர் தளபதி மு.க.ஸ்டாலின் ஆணைக்கிணங்க தொழிலாளர் திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் சி.வெ.கணேசன் அவர்களின் வழிகாட்டுதலின்படி நேற்று போத்திரமங்கலத்தில் அமைந்திருக்கும் சட்டமேதை டாக்டர் அம்பேத்கார் அவர்களின் 131வது பிறந்தநாள் விழாவில்
திட்டக்குடி நகராட்சி மன்ற தலைவர் திருமதி. வெண்ணிலா கோதண்டம் அவர்களும் நகராட்சி துணைத் தலைவர் திரு.VPP பரமகுரு அவர்களும், நகராட்சி மன்ற வரிவசூல் குழு தலைவர் திரு. இளையராஜா அவர்களும் திட்டக்குடி இளைஞரணி அமைப்பாளர் திரு. சேதுராமன் அவர்களும், திட்டக்குடி நகர திமுக நிர்வாகிகளும் மற்றும் கூட்டணிக் கட்சி நிர்வாகிகளும் போத்திரமங்களத்தில் உள்ள டாக்டர் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து இனிப்புகள் வழங்கினார்கள். மற்றும் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டார்கள்.
செய்தியாளர்; செ. பாலாஜி.


No comments:
Post a Comment