அனைத்து மக்கள் சேவை இயக்கத்தின் சார்பில் அண்ணல் அம்பேத்கர் அவர்களின் திருஉருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி காவல் நிலையங்களுக்கு அண்ணல் அம்பேத்கர் அவர்களின் புகைப்படம் வழங்கும் நிகழ்ச்சி - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Friday, 15 April 2022

அனைத்து மக்கள் சேவை இயக்கத்தின் சார்பில் அண்ணல் அம்பேத்கர் அவர்களின் திருஉருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி காவல் நிலையங்களுக்கு அண்ணல் அம்பேத்கர் அவர்களின் புகைப்படம் வழங்கும் நிகழ்ச்சி


கடலூர் மஞ்சக்குப்பம் மைதானத்தில் டாக்டர் பாரதரத்னா அம்பேத்கர் அவர்களின் 131. வது பிறந்த  நாளை முன்னிட்டு அனைத்து மக்கள் சேவை இயக்கத்தின் சார்பில் அண்ணல் அம்பேத்கர் அவர்களின் திருஉருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி காவல் நிலையங்களுக்கு        அண்ணல் அம்பேத்கர் அவர்களின் புகைப்படம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது !!!!


கடலூர் மாவட்டத் தலைநகர் மஞ்சக்குப்பம் மைதானத்தில் சட்ட மாமேதை புரட்சியாளர் அண்ணல் அம்பேத்கர் அவர்களின் 133 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு அனைத்து மக்கள் சேவை இயக்கத்தின் சார்பில் அவரது திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து புகழாரம் செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.



நிகழ்ச்சியில் மாவட்ட அமைப்பாளர் ரமேஷ் தலைமை தாங்கினார் மாவட்ட பொருளாளர் ஞானமுத்து மாவட்ட அமைப்பாளர் ரவி மாவட்ட செயலாளர்        கே .வீரமணி ஆர்.பி. கவியரசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர் சிறப்பு அழைப்பாளராக அனைத்து மக்கள் சேவை இயக்கத்தின் நிறுவனர் தங்கம் முருகன் கலந்துகொண்டு அண்ணல் அம்பேத்கர் அவர்களின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.


பின்பு கடலூர் புது நகரில் உள்ள அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் சட்ட மாமேதை அண்ணல் அம்பேத்கர் அவர்களின் திருஉருவ புகைப்படம் காவல் நிலையத்திற்கு காவலர்களிடம் வழங்கினர்  காவலர்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினர்மேலும் இந்நிகழ்ச்சியில் கடலூர் ஒன்றிய செயலாளர் புகழேந்தி  அண்ணாகிராமம் ஒன்றிய செயலாளர் செல்வகுமார் குறிஞ்சிப்பாடி ஒன்றிய செயலாளர் மலையப்பன் ஸ்ரீமுஷ்ணம் ஒன்றிய செயலாளர்          பி. சுந்தர் ஆகியோர் பெருந்திரளாக கலந்துகொண்டனர்.


மாணவ மாணவிகளுக்கு அண்ணல் அம்பேத்கர் அவர்களின் வாழ்க்கை வரலாறு புத்தகங்கள் மற்றும் இனிப்புகள் வழங்கினர் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு அனைத்து அரசு அலுவலகங்களிலும்       அனைத்து மக்கள் சேவை இயக்கத்தின் சார்பில் சட்ட மாமேதை அண்ணல் அம்பேத்கர் அவர்களின் திருஉருவ புகைப்படம் விரைவில் நேரில் சென்று வழங்கப்படும் என்று நிறுவனர் தங்கம் முருகன் தெரிவித்தார்.

செய்தியாளர்; வீ. சக்திவேல்.


No comments:

Post a Comment

*/